Breaking News

ஆஸ்திரேலியாவில் 9 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம் : பாகுபாட்டுடன் நடத்துவதாக ஆப்ரிக்க – ஆஸ்திரேலிய சமூகத்தினர் கண்டனம்

Prohibition of travelers from 9 African countries in Australia. African-Australian community condemns discrimination

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் திரிபு வகை வைரஸ் பரவத்தொடங்கியதை அடுத்து 9 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாடுகளில் வருகை தந்த பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Prohibition of travelers from 9 African countries in Australia. African-Australian community condemns discrimination,இந்நிலையில் குறிப்பிட்ட ஒன்பது நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம் பிற்போக்கு நடவடிக்கை என்றும், அந்நாட்டவர்களை தண்டிக்கும் வகையில் உள்ளதாகவும் ஆப்ரிக்க சமூகத்தினர் உள்ளடக்கிய அமைப்பின் தலைவர் Joe Tuakeu Tuazama தெரிவித்துள்ளார். இது மிகவும் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நடவடிக்கை என்றும், அதே நேரத்தில் இதுபோன்ற தவறான நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டு இருக்கக்கூடாது என்றும்
Joe Tuakeu Tuazama கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களை துன்புறுத்தலில் விழிம்பில் கொண்டுபோய் நிறுத்தும் நடவடிக்கை என்றும் இது எங்களை தனித்து அடையாளம் காட்டுவதற்கான மற்றொரு முயற்சி என்றும் கடுமையான விமர்சனங்களை ஆப்ரிக்க சமூக அமைப்பின் தலைவர் Joe Tuakeu Tuazama
முன் வைத்துள்ளார்.

Prohibition of travelers from 9 African countries in Australia. African-Australian community condemns discrimination.நவம்பர் 27ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஷீஷெல்ஸ், நமீபியா, ஜிம்பாப்வே, லெசெதோ, ஈட்ஸ்வட்னி, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலிய வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்தே Joe Tuakeu Tuazama தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பிட்ட 9 நாடுகளில் இருந்து பயணிகள் வருகைக்கு பிரிட்டன் முதலில் தடை விதித்த நிலையில், ஐரோப்பிய யூனியன் அதனைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அதனை நீக்குவதற்கான கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் Cyril Ramaphosa தெரிவித்துள்ளார்.

இதேபோன்று குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் டெல்டா பகுதியில் இருந்து மக்களை பாதுகாத்து தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இலக்கை எட்டியுள்ள நிலையில், மீண்டும் புதிய வகை வைரஸ் பாதிப்பை தடுக்கும் நோக்கிலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது அவசியமான நடவடிக்கையே என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Link Source: https://bit.ly/31jZQgO