Breaking News

சைபர் ஹேக்கர்கள், மனித உரிமையை தவறாக பயன்படுத்துவோர், புகார்களில் சிக்கிய அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய தடைவிதிக்கும் Magnitsky மசோதா பாராளுமன்றத்தின் கீழ்சபையில் தாக்கல்

Magnitsky bill to bar officials from entering Australia on complaints of cyber hackers, human rights abuses,

சர்வதேச நாடுகளில் மேற்கண்ட குற்றச்சசெயல்களில் ஈடுபட்ட தனிநபர்கள், குழுக்களை ஆஸ்திரேலியாவில் நுழைய தடைவிதிக்கும் மற்றும் அவர்களுக்கான பணப்பலன்களை நிறுத்தி வைக்கும் மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்று கூறப்படுகிறது.

இந்த மசோதா மத்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செனட் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Magnitsky bill to bar officials from entering Australia on complaints of cyber hackers, human rights abuses.இந்த சட்டம் அமெரிக்காவின் Magnitsky சட்டத்தின் பகுதி வரைவுகளை எடுத்துக் கொண்டுள்ளது என்றும், மேலும் லண்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் Magnitsky சட்டத்தை ஒத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தீங்கிழைக்கும் நோக்கில் செயல்படும் ஹேக்கர்களை கண்டறிந்து அவர்களை தடுக்கும் வகையில் சட்டம் செயல்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

2019 ம் ஆண்டில் இருந்து பரிசீலிக்கப்பட்டு வந்த இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் விசாரணைக்கு உட்பட்டு காத்திருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் – அமெரிக்கன் நிதி மேலாளர் Bill Browder இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தெரிவித்துள்ளார். இந்த மசோதாவுக்காக 5 முதல் 6 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளதாகவும், இது நிறைவேறக்கூடாது என்ற பலரின் எண்ணம் தகர்க்கப்பட்டு தற்போது செயல்வடிவம் பெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக Bill Browder கூறியுள்ளார்.

Magnitsky bill to bar officials from entering Australia on complaints of cyber hackers, human rights abusesஅரசின் நேரடி மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தகவல்களை திருடும் நோக்கில் செயல்படும் அளவுக்கு சட்டம் பலவீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக ஹேக்கர்கள், தவறிழைக்கும் அரசு அதிகாரிகள், மனித உரிமை தீங்கிழைக்கும் நோக்கில் பயன்படுத்துவோர் மிகவும் பலம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா வாயிலாக பல்வேறு கட்டுபாட்டு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ளும் என்றும், அதனை அனைத்து தரப்பினரும் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் Bill Browder கேட்டுக்கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/31hF1md