Breaking News

டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தை அறிமுகப்படுத்தியது ஜப்பான் : கொரோனா பரவல் அச்சம் இருப்பதாக எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

Japan unveils Olympic Village in Tokyo, Medical experts warn of fear of corona spread

டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்படுள்ள கிராமத்தை ஜப்பான் அறிமுகப்படுத்தி உள்ளது. அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை பார்வை பார்வையிட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 15 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அடுத்த சில வாரங்களில் டோக்கியோவிற்கு வருகை தருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Japan unveils Olympic Village in Tokyo, Medical experts warn of fear of corona spread.மேலும் போட்டி ஏற்பாட்டாளர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் டோக்கியோவுக்கு வரக்கூடும் என்பதால் தொற்று பரவல் அச்சம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் சந்திக்காத சவாலை தற்போது சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் டோக்கியோ ஒலிம்பிக் இருக்கு வருகைதரும் 80% பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்பதை இதுவரை உறுதி செய்துள்ளதாகவும், மேலும் பல்வேறு இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உடனடியாக முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சவாலான சூழலில் மிகவும் பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், தொற்று பரவும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் குவிவது மேலும் அபாயமானது என்றும் ஆஸ்திரேலிய மக்கள் தொகை சுகாதார சிறப்பு நிபுணர் Annie Sparrow கூறியுள்ளார். ஒலிம்பிக் கிராமம் ஒரு தொற்றுப்பரவல் மையமாக மாறிவிடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Japan unveils Olympic Village in Tokyo, Medical experts warn of fear of corona spread,அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வரக்கூடிய அனைவருக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. தங்குமிடம், உணவு அருந்தும் இடம், ஓய்வு அறை, பத்திரிக்கையாளர் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நீண்ட நேரம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது அனுமதிக்கப்பட்டாலும் அது தனிநபர் தங்குமிடங்களில் மட்டுமே அருந்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் உள்ள உணவருந்தும் மேசைகளுக்கு வருபவர்கள் தங்கள் உணவுகளை எடுத்துக் கொண்டு உடனடியாக அறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அறைகளில் செய்யப்பட்டுள்ள காற்றோட்ட வசதிகள் தொடர்பாகவும், கூடுதல் நபர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றாத வீரர்-வீராங்கனைகள் உள்ளிட்டவர்களை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். போட்டியின்போது ஒன்றுகூடி பாடுவது முழக்கங்களை எழுப்புவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தொடர்ந்து சுகாதார நிபுணர்கள் ஜப்பான் அரசுக்கும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் இயல்புக்கு மாறான சூழலில் இவ்வளவு பெரிய போட்டியை நடத்துவது என்பது மிகவும் சவாலானது என்றும், அதனை மிகவும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3vRBwfg