Breaking News

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உலகின் விலை உயர்ந்த மாம்பழ வகை : நாய்களுடன் பாதுகாவலர்களை பணிக்கு அமர்த்திய விவசாய தம்பதி

World's Most Expensive Mango in Madhya Pradesh, India. A Farmer Couple Hiring Guards With Dogs

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் விவசாயி சங்கல்ப் சிங் பரிகார் அவரது மனைவி ராணி விளைவித்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்திற்கே இந்த அளவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் விளையும் மியாசாகி மாம்பழம் சூரியனின் முட்டை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. ஒரு மாம்பழத்தின் எடை 350 கிராம் என்றும், 2 மாம்பழங்கள் அடங்கிய பெட்டி ஒன்றின் விலை 8600 முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமான மியாசாகி மாம்பழத்தின் சுவை மற்ற மாம்பழங்களின் சுவையை விட பன்மடங்கு அதிகமானதாக இருக்கும்.

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான சென்னைக்கு வந்து விட்டு ரயிலில் சொந்த ஊர் திரும்பும் போது, மற்றொரு விவசாயிடம் இருந்து 2500 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மாங்கன்று செடி தான் இந்த அளவுக்கு உயர்வான வகை மாம்பழத்தை தரும் என்பது பரிகார் – ராணி தம்பதி அறிந்திருக்கவில்லை. தானே தாமினி என்று பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் அதில் விளைந்த மாம்பழம் சாதாரண பழங்களை விட மிக அடர்சிவப்பு நிறத்தில் வித்தியாசமாக இருந்தாகவும் பரிகார் கூறியுள்ளார்.

World's Most Expensive Mango in Madhya Pradesh, India A Farmer Couple Hiring Guards With Dogs.சூரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் மியாசாகி மாம்பழத்திற்கு முதன்முறையாக 21 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தவுடன் தான் இது உண்மையில் விலை உயர்ந்த மாம்பழ வகை என்பதை பரிகார் உணரத்தொடங்கி உள்ளார். ஒரு பெட்டி மியாசாகி மாம்பழம் 2019ல் இரண்டரை லட்சத்திற்கும், ஒரு பழம் 3 ஆயிரம் ரூபாய்க்கும் ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த பரிசாகவும் ப்ரிமியம் வகை சாக்லேட்டாகவும் இந்த மாம்பழம் பார்க்கப்பட்டது.

இந்த மாம்பழத்தின் காம்புப் பகுதி முதல் அத்தனை இடமும் செக்கச்செவேல் என அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்றும், இதனை சதைப்பகுதி ஜெல்லியை போல இருக்கும் என்றும் விவசாயி பரிகார் கூறுகிறார். ஜப்பானில் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் இந்த வகை மாம்பழம் மத்தியபிரதேசத்தின் தட்பவெட்ப நிலையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நிறம், சுவை கொண்ட மாம்பழமாக உள்ளது என்றும் பரிகார் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் 52 மாங்கனிகள் தற்போது கிடைத்துள்ள நிலையில் விலை அதிகமாக கிடைத்தாலும் அதனை தற்போது விற்பனை செய்ய விரும்பவில்லை என்றும், இதனை மீண்டும் விளைவித்து கூடுதல் மியாசாகி வகை மாங்கன்றுகளை வளர்க்க உள்ளதாகவும் பரிகார் ராணி தம்பதி தெரிவித்துள்ளனர். இதனை தங்கள் பிள்ளைகள் போல வளர்த்து வருவதாகவும் இதற்காக மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 3 பாதுகாவலர்கள் 9 நாய்களை பணியமர்த்தி உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களில் 14 மாம்பழங்கள் திருடு போனதாகவும் அதனை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பரிகார் கூறுகிறார். தங்களுக்கு பணத்தை விட இந்த மாமரங்களும், மாங்கனிகளுமே முக்கியம் என்று கூறுகின்றனர் பரிகார் – ராணி தம்பதியினர்.

Link Source: https://bit.ly/2Un49UH