Breaking News

ஆளுநர் உரையுடன் தொடங்கிய திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் : சர்வதேச பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

கொரோனா பெருந்தொற்று காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் அனுமதிக்கப்பட்டனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 16 வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சரவை சபாநாயகர் அப்பாவு கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் என அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

The first legislative session of the DMK government began with the Governor's address. Chief Minister orders the formation of a panel of international economistsஇதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜான் த்ரே உள்ளிட்ட சர்வதேச பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த மற்றும் முதலீடுகளை ஈற்று தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு என பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் ஆலோசனை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது, ஒன்றிய அரசிடம் தடுப்பூசி பெற்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது, கருணை பெருந்துறை தடுப்புக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட தொகையில் ஆக்சிஜன் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளுதல், மாநில உரிமைகளை காத்தல், கச்சத்தீவை மீட்பது, நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான உரிய நடவடிக்கை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்றும், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பான எந்தவித அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரை தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. மக்களிடம் வாக்குறுதி அளித்த பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள கூட்டத்தொடர் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bbc.in/2TORZ6G