Breaking News

சர்வதேச வர்த்தக ஒப்பந்தகளுக்கு எதிராக செயல்படும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ஜப்பான் துணை நிற்கும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

Japan has said it will support Australia in speaking out against China for violating international trade agreements.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனா மீது பல்வேறு சந்தேகங்களை ஆஸ்திரேலியா முன்வைத்து வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்களின்
பொருட்களை கொள்முதல் செய்யகூடாது என்று மறைமுகமாக சீனா தன்னுடைய இறக்குமதியாளர்களிடம் கூறியுள்ளது . இதனால் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி கடுமையாக சரிந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரிசி பெய்னி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் டூட்டன் பங்கேற்றனர். இதே போன்று ஜப்பான் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமுட்சு மொட்டேகி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நோபு குஷி ஆகியோர் பங்கேற்றனர்

Japan has said it will support Australia in speaking out against China for violating international trade agreementsஆலோசனையின் நிறைவாக இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பாதுகாப்பு துறையில் இணைந்து பணியாற்றுவது, தென் சீனக்கடல் பகுதியில் நிலவும் பதற்றம், மியான்மர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படும் சீனா குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ பசிபிக் பெருங்கடலில் நிலவும் அசாதாரண நிலையில் , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிடையே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில்
இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் தைவான் மீது சீனாவின் ராணுவ அழுத்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் சீனாவின் ஷின் ஷியாங் மாகாணத்தில் ஊகுர் பிரிவினர் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் பிரிவினராக உள்ல ஊகுர் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகள் குறித்து ஐ நா மனித உரிமை ஆணையம் தன்னுடைய குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டுள்ளது.

மேலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே RAA (Reciprocal access agreement) ராணுவ ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் இருவரும் ஈடுபடுவது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்லது.

Link Source: https://ab.co/3wdpNZk