Breaking News

புலம்பெயர் தமிழ் குடும்பம் மீண்டும் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பில்லை என வெளியுறவுத் துறை தகவல் : சூழலைக் கருத்தில் கொண்டு மீண்டும் குயின்ஸ்லாந்தில் வசிக்க அனுமதி தரவேண்டும் என சிறுமியின் தாய் கோரிக்கை

Foreign Ministry says Tamil family in Diaspora may not be able to settle in Australia, Foreign Ministry

புலம்பெயர் தமிழ் குடும்பமான பிரியா – நடேசலிங்கம் தம்பதியின் இரண்டாவது பெண் குழந்தை தார்ணிகா ரத்த தொற்றுநோய் பாதிக்கப்பட்டு பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது குடும்ப குடியேற்ற வழக்கறிஞர் அரசுக்கும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கையை முன் வைத்து இருந்தார். அதில் பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தை தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியுடன் அவர்கள் சேர்ந்து இருக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

Foreign Ministry says Tamil family in Diaspora may not be able to settle in Australia. Foreign Ministryஇந்நிலையில் புலம்பெயர் தமிழ் குடும்பத்தை எங்கு குடியேற்றம் செய்வது என்பது தொடர்பாக உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாகவும், அதில் தமிழ் குடும்பம் மீண்டும் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் பிரியா – நடேசலிங்கம் குடும்பத்திற்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அது நியூசிலாந்து அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் புலம்பெயர் குடும்பமாக குடியேறும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் Karen Andrews’s கூறியுள்ளார்.

அதேநேரத்தில் புலம்பெயர் குடும்பம் குடியேறுவதற்கான முதல் வாய்ப்பாக அமெரிக்கா இருக்கும் என்றும் அதற்காகவே நியூசிலாந்து இருக்கும் என்றும் செனட்டர் Payne கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.

Foreign Ministry says Tamil family in Diaspora may not be able to settle in Australi,. Foreign Ministryஇந்நிலையில் வெளியுறவுத் துறையின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மருத்துவமனையில் சிறுமி தார்ணிகாவை தன் கைகளில் ஏந்தியபடி தாய் பிரியா உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் மருத்துவ சிகிச்சைக்காகவும், தங்கள் மீது அன்பு செலுத்திய மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தாங்கள் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் குடியேறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது குழந்தையின் உடல் நலனை பாதுகாக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் பிரியா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரத்தில் தங்களை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்து Bileola செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் குடியேற்ற வழக்கறிஞர் Carina Ford தொடர்ந்து அரசிடமிருந்து இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதேநேரத்தில் நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு குடியேற்றம் செய்ய பரிந்துரைப்பது சரியான முடிவல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அது காலத்தையும் பணத்தையும் வீணாக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் பிரியா – நடேசலிங்கம் தம்பதியினர் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும், அதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் Carina Ford கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3ct6nYQ