Breaking News

வெளிநாடுகளில் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை நாடு திரும்ப செய்வதே அரசின் தலையாய கடமை -ஸ்காட் மோரிசன்

Queensland மற்றும் NSW தன்னுடைய இயல்புநிலைக்கு திரும்பும்பொழுது, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவிலும் சர்வதேச வருகைக்கான இடைவெளிகள் அதிகரிக்கும் என பிரதமர் Scott Morrison கூறினார்.

பிரிஸ்பனில் மாறுபடும் COVID-19 தொற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ஆஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடக்கத்தில் பாதியாக குறைக்கப்பட்டது. பிப்ரவரி 15 முதல் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வாரமும் 530 ஆகவும், விக்டோரியாவில் 1310 ஆகவும் அதிகரிக்கப்படும்.

இது குறித்து Scott Morrison கூறுகையில், வெளிநாடுகளில் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை நாடு திரும்ப செய்வதே அரசின் முதல் கடமை. நமது எல்லைகள் மூடப்பட்டுள்ளது. யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வர முடியாது. நாடு முழுவதும் ஹோட்டல்கள் தனிமைப்படுத்தலை அதிகரிக்க மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 211,000க்கும் அதிகமான மக்கள் தொற்றின் போது வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர். ஆனால் சுமார் 40,000 ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். திரும்பி வருபவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என்றார்.

மேலும் கூறுகையில், இப்பொழுது நாங்கள் 2021ல் இருக்கிறோம். இப்பொழுது ஆபத்தான சூழ்நிலை மாறிவிட்டது. மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோயை எதிர்கொள்ள பழகிக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். ஹோட்டல் தனிமைப்படுத்தலில் ஆஸ்திரேலியாவில் COVID-19 பரவுவதை குறைப்பதில் நம்ப முடியாத அளவிற்கு பயனுள்ளதாக அமைந்தது. இது தொடரும். முக்கிய நகரங்களுக்கு வெளியே, திரும்பிய பயணிகளை தனிமைப்படுத்துவதை அரசு பார்த்துக் கொள்ளும் என்றார்.

இதற்கு எதிர்கட்சி தலைவர் Anthony Albanese கூறுகையில், பிரதமர் வேண்டுமென்றே மாநிலத்திற்கு பொறுப்பை ஒப்படைக்கிறார். எந்த பிரச்னை ஏற்பட்டாலும் மாநிலத்தை குறை கூற முடியும். நமது அரசியலைப்பு நமது தேசிய அரசாங்கமும் தனிமைப்படுத்தலுக்கு பொறுப்பானது என்பதை தெளிவுப்படுத்துகிறது என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் Scott Morrison கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் National Cabinet ன் முடிவின் அடிப்படையில் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நடத்துவதற்கு மாநிலமும், பிரதேசங்களும் பொறுப்பு என்றார். பெர்த், மெல்பர்ன் ஆகியவற்றில் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோதிலும், ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமையன்று எந்த வித கொரோனா தொற்று எதுவும் இல்லை.

Chief Medical Officer Paul Kelly கூறுகையில், 9 மக்கள் மட்டுமே COVID-19 தொற்றினால் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். யாரும் தீவிர சிகிச்சையில் இல்லை. சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் யாரும் இறக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்ட சூழலில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் பிப்ரவரி 3ம் தேதிஅன்று 20,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நம்முடைய ஹோட்டல் தனிமைப்படுத்தல் மற்றும் எல்லை கட்டுப்பாடுகளினால் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று கூறினார்.