Breaking News

காட்டுத்தீயால் 86 வீடுகளுக்கு மேல் எரிந்து நாசம்..மழை வருமா என்ற ஏக்கத்தில் தீயணைப்பு வீரர்கள் !

Over 86 houses destroyed by bushfire Firefighters longing for rain

86 வீடுகளை அழித்த Perth Hillsல் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை, மிக வலிமையான காற்று தடுக்கிறது. நேற்றிரவு எந்த இழப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் 5 வீடுகள் எரிந்து விட்டதாக வெள்ளிக்கிழமை கூறினர். வார இறுதியில் மழை வரும் என்ற நம்பிக்கையினால் தென்மேற்கு நோக்கி வெப்பமண்டல மாற்றத்தால், தீயணைப்பு வீரர்கள் தீப்பிழம்புக்கு மேல் நகரமுடியும். சோர்வுற்ற தீயணைப்பு வீரர்கள் கடினமான சவாலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

Department of Fire and Emergency Services Commissioner Darren Klemm கூறுகையில், இந்த எண்ணிக்கை இவ்வாறு உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் உள்ளூர் அரசுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம். சில நேரங்களில் எரிந்தது வீடுகளோ அல்லது கொட்டகையோ என்பது தெரியவில்லை. இதைப் பற்றிய விரிவான அறிக்கையை எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் கூற வேண்டும். நாங்கள் நம்ப முடியாத வலுவான காற்றை எதிர்பார்க்கிறோம். நாளை காலை மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு வந்துள்ளது. ஆனால் மழைக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இருந்தபோதிலும் வலுவான காற்றை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.

Over 86 houses destroyed by bushfire Firefightersதீயை அணைக்கும் பணியில் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் பள்ளத்தாக்கில் வசிப்பதால், தீயானது மேலும், கீழும் செல்வதால் மோசமான நிலை காணப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு மலைப்பாங்கான இந்த பகுதிதான் மோசமான எதிரி என்றார். Toodyay சாலை திறக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். தீயணைப்பு வீரர்கள், சாயந்த மின்கம்பங்களை சரிபார்த்து வருகின்றனர்.

Clenton Road, O’Brien Road மற்றும் Ewing Road பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டது. DFES, மக்களிடம் கூறுகையில், நீங்கள் வெளியேற முடிவு செய்தால் உடனே வெளியேறவும். எங்கு தீ இல்லையோ அந்த வழியாக பயணிக்கவும். தீ பரவுவதற்கு முன்பே பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும். இல்லையே கடும் தீ உங்களை அழித்து விடும். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றனர்.

மாநில முதல்வர் Mark McGowan வியாழக்கிழமை சேதத்தை பற்றி கூறும்பொழுது, இதுபேரழிவு என்றார். இதனால் பலர் தங்களது வீடுகளை இழந்து அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயால் ஏற்பட்ட இழப்புகள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உள்ளன. இந்த தருணத்தில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார்.