விக்டோரியாவில் சனிக்கிழமை அன்று எந்த ஒரு புது தொற்றும் பதிவாகவில்லை.UK புது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவர்க்கும் நெகடிவ் -என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை மேற்பார்வையிடும் அவசர சேவைகள் அமைச்சர் Lisa Neville,ஹோட்டல்கள் அனைத்தும் காற்றோட்டமாக இருக்கிறதா என்பதை சோதனையிட்டார்.
ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு நிபுணர்களின் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாக Lisa Neville கூறினார், ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் முன்பு N-95 முகக்கவசங்களை மட்டுமே அணிந்திருந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவர்க்கும் உணவு விநியோகிக்கும் நேரமும் சுழட்சி முறையில் மாற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தால் அனைவரும் ஒரு நேரத்தில் சந்திக்கும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது .சுகாதார அமைச்சர் Martin Foley கூறுகையில் ,கொரோனா பாதிப்பு இன்னும் அடங்கவில்லை ,அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறுகையில் ,14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பிறகே அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள் என்று கூறினார்.கொரோனா பாதிப்பு முற்றிலுமாக பூஜ்ஜியமாக மாறினால் ,அதுவே மிகசிறந்த நாளாக இருக்க முடியும் என்று கூறினார்.507 டென்னிஸ் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட மேலும் 1200 இரண்டாம் நிலை தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும் திங்கள்கிழமை முதல் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்க இருக்கின்றது. ஏனென்றால் அனைவர்க்கும் சோதனை முடிவில் நெகடிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
புதன்கிழமை கட்டுப்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்ப,டென்னிஸ் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.பெர்த் மற்றும் WA , தென் மேற்கு மற்றும் பீல் பகுதிகள் சிகப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.மேலும் 5 நாள் ஊரடங்கும் முடிவுக்கு வருகின்றது.விக்டோரியாவில் தற்போது 22 கொரோனா பாதிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.