Breaking News

ஆஸ்திரேலியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிவதிலும் உள்ளரங்கிலும் தளர்வுகள் கொடுக்கப்படுகிறது.

அதேநேரம் பல மாகாணங்களில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

அவர்களுக்கு பயன்படும் விதமாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

It has been reported that Australians can download the corona vaccine certificate from websites..அதன்படிhttps://my.gov.au/ இந்த இணையதள பக்கத்தில் பொதுமக்கள் தங்களுடைய அடையாள எண்ணைக் கொடுத்து தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூடிய அனைத்து தடுப்பூசிகள் குறித்த விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் ஒரு சிலருக்கு தங்கள் விபரங்கள் இல்லை என்றால் அந்த தனிநபர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுக வேண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் வழங்கப்படும் தடுப்பூசி குறித்த விவரங்களும் ,டெட்டானஸ் போன்ற தடுப்பூசி விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.

மெடிக்கேர் அட்டை இல்லாதவர்கள் அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளக்கூடிய மருத்துவரிடமிருந்து அதற்கான அத்தாட்சியை பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3938ksD