Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை விட அதிவேகமாக விக்டோரியாவில் தொற்றுப் பரவல் : காரணங்களை ஆராயும் தொற்றுநோயியல் நிபுணர்கள்

Epidemic spreads faster in Victoria than in New South Wales. epidemiologists investigating the causes.

ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியை தவிர்த்து பெரும்பாலான மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு அமலில் உள்ள முடக்க நிலை படிப்படியாக சில மாகாணங்களில் நீக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விக்டோரியா மாகாணத்தில் கட்டுமானத் துறை மூலமாக அதிகரித்த தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை விடவும் பல மடங்கு அதிகமாக தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Epidemic spreads faster in Victoria than in New South Wales. epidemiologists investigating the causes...கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவே விக்டோரியாவில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், அதனை மக்கள் மீறும்பட்டசத்தில் மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் Tony Blakely கூறியுள்ளார். முடக்க நிலை காலத்தில் பல்வேறு நகரங்களுக்கும் மக்கள் சென்று வந்தது குறித்து அவர்களது செல்போன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் தொற்று பரவலுக்கு எத்தனை சதவீதம் மக்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் வெளியில் நடமாடும் மக்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் தொடர்பில் இருக்கும் மக்கள் மூலமாகவே வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதும், அவர்களே புதிய தொற்று மையங்கள் உருவாவதற்கான காரணமாக இருப்பதாகவும் மூத்த ஆராய்ச்சியாளர் Jason Thompson தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவில் கட்டுமானத் துறை மூலமாக தொடர்பு இருப்பதே அதற்கு சரியான உதாரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்டுமான தளங்களுக்கு சென்று வந்தவர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பதும் அவர்கள் மூலமாக வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதும் சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

Epidemic spreads faster in Victoria than in New South Wales. epidemiologists investigating the causesநாளொன்றில் பதிவாகும் அதிகபட்ச வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாட்டில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருப்பதாகவும் விக்டோரிய மாகாண அரசு தெரிவித்துள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், மூடப்பட்டுள்ள மாகாண எல்லைகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் மற்ற மாகாண ப்ரீமியர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/2Xkn6sk