Breaking News

உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும், Kremlin-க்கும் சவாலாக அமையும் : சமூக வலை தள யுகத்தில் நடக்கும் போருக்கு பதிலளிக்க வேண்டிய நிலை வரும் என நிபுணர்கள் கருத்து

Invasion of Ukraine will pose a challenge to Russian President Vladimir Putin and Kremlin. experts predict that war will have to be responded to in the age of the social web site.

உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 137 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

மேலும் இரண்டாவது நாளாக தொடர்ந்து ரஷ்யா வான் வழி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எங்கு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனையில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் ஈடுபட்டுள்னளர். உக்ரைன் ராணுவம் அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று அதிபர் புதின் அழைப்பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் போர் முடிவுக்கு வந்த பின்னரே ராணுவ ரீதியாக அதிபர் புதின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பின்னணி புரியும் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது போரை திட்டமிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Invasion of Ukraine will pose a challenge to Russian President Vladimir Putin and Kremlin. experts predict that war will have to be responded to in the age of the social web site..2008 மற்றும் 2014 ல் ஜார்ஜியா மற்றும் கிரிமியா –க்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை போல் அல்லாமல் இது அல்லாமல் இது ரஷ்யாவின் ராணுவ வீரர்களை, துருப்புகளை ஒட்டுமொத்த படைகளை அழிக்கும் வகையிலானது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்கம் அளவு அதிகரிக்கும் போது பாதிப்பும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சி மிகுந்த இந்த நேரத்தில் ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கை அனைத்தும் உலக நாடுகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்யா ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் இளம் வயதினர் என்றும், அவர்களில் 20 வயது கொண்டவர்கள் புதிய வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kremlin –க்கு இது மிகப்பெரும் சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் பேரணிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள உக்ரைனியர்கள் வெள்ளை மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யாவில் பேரணியில் ஈடுபட்ட ஆயிரத்து 400 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

எதிர் வரும் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வகையில் இருக்கும் என்றும், அதனை கருத்தில் கொண்டு ரஷ்யா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Link Source: https://ab.co/3M2WEZi