Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 57 வயதான வழக்கறிஞர் Ho Ledinh சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

சிட்னியில் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த 57 வயதான வழக்கறிஞர் Ho Ledinh, அடையாளம் தெரியாத இரண்டு பேரால் 3 முறை சுடப்பட்டார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பேங்க்ஸ்டவுன் பிளாசாவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மிக மோசமான முறையில் மேற்கண்ட சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட காவல்துறையின் ஆதாரங்கள் மற்றும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் இருவருக்குமான தண்டனை குறித்த தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

57-year-old lawyer Ho Ledinh shot dead in Sydney, Australia. Police arrest two in connection with a shooting..அந்த வகையில் துப்பாக்கியால் சுட்ட 42 வயதான Arthur Kelekolio என்ற நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதில் 22 ஆண்டுகள் பரோல் இல்லாதவகையில் அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் உடந்தையாக செயல்பட்ட 37 வயதான Abraham Sinai என்ற நபருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் நிரம்பியிருந்த வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு அங்கிருந்தவர்கள் எந்த அளவுக்கு அதிர்க்கு ஆளாக்கி இருக்கும் என்பதை கொலை செய்தவர்கள் உணரவில்லை என்றும், தண்டனை விவரங்களை வழங்கும் போது அவர்களிடம் எந்தவித குற்ற உணர்வும் இல்லை என்றும் நீதிபதி Robert Hulme குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் Ho Ledinh சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றும், துப்பாக்கி கலாச்சாரத்தை பொதுவெளியில் அதிகரித்து வருவதை கடுமையான நடவடிக்கை மூலமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி Robert Hulme தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் முற்றிலும் திட்டமிடப்படாத மிகவும் திறமையற்ற சம்பவம் என்பதை நீதிபதி முற்றிலும் மறுத்தார். குற்றம் நிருபணம் ஆன நிலையில் அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிபதி நிராகரித்தார். காணொலி வாயிலாக இரண்டு பேருக்கும் தண்டனை விவரங்கள் வழங்கப்பட்ட நிலையில் இருவரும் கைகளை கட்டிக் கொண்டு மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர்.

Link Source: https://ab.co/3hhLMZx