Breaking News

வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் !

வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Dan Tehan கூறுகையில், வரும் மாதங்களில் ஆஸ்திரேலியர்கள் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு மூன்று வழி பயணத்தை மேற்கொள்ள முடியும். இதில் Fiji-யும் சேர விரும்புவதாக கூறினார். இதை பற்றி சிங்கப்பூர் சகாக்களுடன் முக்கிய ஆலோசனையை வரும் மாதங்களில் மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

dan tehan minister australiaஇது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி பயண பாஸ்போர்ட்டுக்கு ஒப்புதல் தெரிவித்த நாடுகள் அதை எவ்வாறு எல்லையில் பயன்படுத்துவது என்பது மிக முக்கியமானது என்று கூறினார்.அதில் முக்கியமானது என்னவென்றால், அந்த தடுப்பூசி பாஸ்போர்ட்டை நம்மால் சரிபார்க்க முடியும். இதனால் இருவழி பயணம் எந்த தனிமைப்படுத்தல் இல்லாமாலும் நடைபெறும். இதன் மூலம் மக்கள் பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் பயணம் செய்ய வைக்க முடியும்.

Trans-Tasman பயணத்தை விரிவுபடுத்துவதிலும், அதில் சேரவும் சிங்கப்பூர் அதிகாரிகள் மிகவும் ஆர்வம் காட்டுவதாகவும், ஆண்டின் மத்தியில் இதற்கான செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

international travelsஆஸ்திரேலியாவை போல சிங்கப்பூரும் தடுப்பூசி போடுவதில் முன்னேறி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பயணம் இடையே நிறுத்தப்பட்டாலும், ஆண்டு இறுதி வரை ஆஸ்திரேலியா நியூசிலாந்துடனான பயணம சேவை தொடர்ந்தது. இருந்தாலும் Trans-Tasman பயணம் இருவழி பாதையாக மாறவில்லை.நியூசிலாந்து மக்கள் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும். ஆனால் ஆஸ்திரேலியர்கள் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு பின்பு தான் செல்ல முடியும் என்று கூறினார்.