Breaking News

மெல்போன் தேவாலயத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் !

78-year-old woman brutally assaulted at Melbourne church

மெல்போனில் தனது தேவாலயத்தை அந்த வயதான பாட்டி திறக்கும்போது வன்முறையாக அடித்து கொடூரமாக தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார்.சனிக்கிழமை காலை 6 மணியளவில் 78 வயதான Penelope katsavos,South Yarra-வில் உள்ள Saints Constantine மற்றும் Helen Greek Orthodox தேவாலயத்தில் இரக்கமின்றி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Katsavos-வின் மருமகள் Erin Katsavos கூறுகையில், அவர் ஷாப்பிங் ட்ராலியில் ஒருவர் நிற்பதைப் பார்த்தார். பின் அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டபோது அவர் கத்தினார். மேலும் அவர் என்ன சொல்கிறார் என்று இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை பின் தள்ளுவண்டியில் கை வைத்தபோது அவன் இவரை முகத்தில் அடித்தார் என்று கூறியதாக Erin கூறினார்.

அவர், தனது மாமியாரை ஒருமுறை குத்தியதாகவும் ஆனால் விழவில்லை, அதனால் அவரை கீழே தள்ளிவிட்டு பின் காலால் உதைத்தார். இத் தாக்குதலை தொடர்ந்து அவர் வெளியேறினார் ஆனால் ஒரு பெண் குற்றவாளியுடன் இருந்திருக்கலாம் எனவும் Erin Katsavos கூறினார்.

78-year-old woman brutally assaulted at MelbourneKatsavos-விற்கு இப்போது இடுப்பு எலும்பு முறிந்து, மணிக்கட்டுகள் உடைந்து மற்றும் மூளையில் இரண்டு இடங்களில் ரத்தமும் வெளிவருகின்றது என்று கூறினார்.

ஆனால் தற்போது , அவர் நன்றாகவும் நல்ல மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார் ஆனால் அவரது உடல்நிலை மிகவும் சரியில்லை. யாராவது அவரை இவ்வாறு செய்ய முடியுமா என என்னால் நம்பமுடியவில்லை, நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம், என்றும் கூறினார்.

78 வயதான இவர், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதியாக 40 வருடங்களாக இருந்து வருகிறார். அவர் மிகச் சிறந்தவர் ஒரு மாமியாராக மற்றும் ஒரு பாட்டியாக அனைத்து இடங்களிலும் விரும்பும் ஒருவராகவே இருந்தார். மேலும் அவர் இதற்கு தகுதியற்றவர் எனவும் வருத்தத்துடன் கூறினார்.

அவரது மகன் Evri Katsavos, தனது தாயாரை தாக்கியவர் கண்டிப்பாக போதை பொருள் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில் குற்றவாளிக்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லை எனவும், இதுபோல் செய்பவரிடம் உங்களால் எதைச் சொல்லமுடியும் எனவும் கூறினார். என் தாயார் தேவாலயதை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு இடத்தில் அவருக்கு இப்படி நடந்திருப்பது மிகவும் மோசமானது என கூறினார்.