Breaking News

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக கப்பல் கட்டும் துறைமுகங்களை மேம்படுத்த திட்டம் : அதிவிரைவு பணிகளை மேற்கொள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் நேரில் ஆய்வு மேற்கொண்டு உத்தரவிட்டார்

Plan to upgrade shipbuilding ports to strengthen Australia's defense infrastructure. Prime Minister Scott Morrison has ordered a face-to-face inspection to expedite work.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கப்பல் கட்டும் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை தற்போது தொடங்கி இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் புதிய கப்பல் கட்டும் துணி முகத்திற்கான பணிகளை அதிவிரைவு நடவடிக்கையின் அடிப்படையில் துவங்க இருப்பதாகவும் 2030ஆம் ஆண்டுக்குள் இதன் மூலமாக 2500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டப்பணிகள் 4 பில்லியன் டாலர் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இருப்பதாகவும் இதற்கான வரைவு திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Plan to upgrade shipbuilding ports to strengthen Australia's defense infrastructure. Prime Minister Scott Morrison has ordered a face-to-face inspection to expedite work..அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக பணிகள் தொடங்கப்பட்டு 2030ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலமாக உலக தரத்திலான கப்பல் கட்டும் துறைமுகமாக இது உருவெடுக்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலமாக வரி செலுத்தும் மக்களுக்கு பலன் ஏற்படும் வகையிலான திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

ஆக்கஸ் ஒப்பந்த விவகாரத்தில் மேற்கு ஆஸ்திரேலியா முக்கிய பங்காற்றி வருவதாகவும் அதன் காரணமாக அனைத்து பாதுகாப்பு வளர்ச்சி பணிகளும் மேற்கு ஆஸ்திரேலியாவில் மையமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்களை உருவாக்குவதில் பல்வேறு முன்னணி திட்டங்களை செயல்படுத்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை முனைப்புடன் இருப்பதாகவும் அதற்கு உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

Link Source: