Breaking News

ஆஸ்திரேலியாவில் 2019ம் ஆண்டு பூர்வகுடி பெண் உயிரிழந்த வழக்கு விசாரணை : நீதிமன்றத்தில் போலீசார் தாக்கிய சிசிடிவி காட்சிகள் சாட்சியமாக பதிவு

Indigenous woman's death trial in Australia in 2019. CCTV footage of police assault in court recorded as evidence

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சம்பவத்தில் Noongar-Yamatji பூர்வகுடி பெண்ணான Wynne காவல்துறையால் துரத்திச் சென்று தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெர்த் நீதிமன்றத்தில் சம்பவத்தன்று காவல்துறையினர் பூர்வகுடி பெண்ணை தாக்கி அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இவை விரிவாக நீதிமன்றத்தால் பதிவு செய்து கொள்ளப்பட்டது.

Indigenous woman's death trial in Australia in 2019. CCTV footage of police assault in court recorded as evidence.சம்பவத்தன்று Wynne போக்குவரத்து நெரிசலில் ஓடிச்சென்று வெளியேற முயற்சிக்கும் போது, அவரை விடாமல் காவல்துறையினர் துரத்திச் சென்று பிடிப்பதில் அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. St Johns ஆம்புலன்சில் இருந்து தப்பித்து செல்லும் மேலும் காயங்களுக்கு ஆளாகிறார். அவரை விடாமல் துரத்தும் காவல்துறை காயங்களுடன் விழுந்துகிடந்த Wynne வை, கையில் விலங்கு மாட்டி அவரை தூக்கி எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போதும் கடுமையான மூச்சுத்திணறல் உடன் இருந்த Wynne வை, ஒரு காவல் அதிகாரி கால் பகுதியிலும், ஒரு காவல் அதிகாரி இடுப்புப் பகுதியிலும் தன் முழங்கால்களை வைத்து அழுத்தக் கூடிய காட்சிகள் சிசிடிவி யில் பதிவாகியுள்ளன.

கடுமையான காயங்களுடன் இருந்த அவரை அங்கிருந்து ராயல் பெர்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவருக்கு மூளையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலனளிக்காமல் அவர் 5 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

Wynne ஆம்புலன்சில் ஏற்றப்படும் போது செவிலியர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவர் கையிலிருந்து கைவிலங்கு கட்டப்பட்டதாகவும் அப்போதே அவருக்கு நாடித்துடிப்பு சீராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் சுமார் 7.42 மணி வரை சிசிடிவி இல் பதிவாகிய இருந்த நிலையில் அதன் முழு காட்சிகளையும் நீதிமன்ற நீதிபதிகள் பார்த்து பதிவு செய்து கொண்டனர்.

அதேநேரத்தில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நாளில் Wynne சீரான மனநிலையில் இல்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அவர் நடவடிக்கைகள் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து பகுதி நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3EyjgNu