Breaking News

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான ஆன்லைன் புத்தாக்க வகுப்பு : விருப்பத்துடன் பங்கேற்கும் Biloela தீவின் புகலிடக் கோரிக்கை சிறுமிகள்

Online Innovation Class for Kids in Australia. Biloela Island Asylum Seekers Girls Willing to Participate

ABC TV -ன் ப்ளே ஸ்கூல் ஆன்லைன் வகுப்பினை வாரந்தோறும் தொகுப்பாளர் Leah Vandenberg வழங்கி வருகிறார். வழக்கமான வகுப்பு முறைகளில் இருந்து விலகி குழந்தைகளுக்கான புத்தாக்க பயிற்சியை வழங்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்பில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

வாரந்தோறும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு இந்த ஆன்லைன் வகுப்ப Zoom மீட் வழியாக நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் புகலிடக் கோரிக்கையில் மிக அதிகம் சிக்கல்களை சந்தித்த குடும்பத்தின் இரண்டு சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். 6 வயது சிறுமி கோபிகா மற்றும் 4 வயது சிறுமி தாருணிகா ஆகியோர் மகிழ்ச்சியோடு பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மேலும் இதே போன்று புலம் பெயர்ந்தோர், புகலிடக் கோரிக்கை கொண்ட குடும்பத்தின் குழந்தைகளும் இந்த வகுப்பில் பங்கேற்று வருகிறர்கள்.

Online Innovation Class for Kids in Australia. Biloela Island Asylum Seekers Girls Willing to Participate..Tree House Cubby என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகுப்பு 45 நிமிடங்கள் என்று தொடங்கப்பட்ட தாகவும் ஆனால் பங்கேற்கும் சிறுவர் சிறுமிகளின் பங்களிப்பை தொடர்ந்து அது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டு, பின்னர் இரண்டு மணி நேரம் வரை குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் பயனுள்ள புத்துணர்வூட்டும் அமர்வாக மாறுகிறது என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தரக்கூடிய ஒரு ஆன்லைன் தேர்வாக இது இருக்கிறது என்று தொகுப்பாளர் Leah Vandenberg தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் கோபிகா, தாருணிகா ஆகியோர் வெறும் புகலிடக் கோரிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமல்ல அவர்களிடம் மிகுந்த ஆற்றல், நம்பிக்கை, செயல்திறனும் இருப்பதை அறிந்து கொண்டதாக Leah Vandenberg தெரிவித்துள்ளார்.

அவர்கள் குழந்தைகளாகவே இருப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவதையும் தான் உறுதிபட தெரிந்து கொண்டதாகவும் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக Leah Vandenberg கூறியுள்ளார். Tree House Cubby குடும்பத்திற்கு அவர்கள் மிக மிக சிறப்பான விருந்தினர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Online Innovation Class for Kids in Australia. Biloela Island Asylum Seekers Girls Willing to Participate.கடந்த ஜூலை மாதத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் புத்தாக்க வகுப்புகள் முடக்க நிலை காரணமாக வீடுகளிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு திட்டத்தை உருவாக்க நினைத்த போது முதலில் புலம்பெயர்ந்த மற்றும் புகலிடக் கோரிக்கை யோடு இருக்கும் குழந்தைகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பார்கள் என்றும் அவர்களுக்காகவே இந்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தான் திட்டமிட்டதாக Kathryn Gor கூறியுள்ளார்.

பாடல் பாடுவது, ஓவியங்கள் வரைவது, கதை சொல்வது என பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று வருவதாக தொகுப்பாளர் Leah Vandenberg கூறியுள்ளார்.

சிறப்பு அனுமதியின் பேரில் பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நடு பிரியா தம்பதியினர் செப்டம்பர் 22ம் தேதியுடன் அவர்களுக்காக நீதிமன்ற உத்தரவு முடியும் தருவாயில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுமி தாருணிகா சமூக தடுப்பு உத்தரவில் உள்ளார். இந்நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது என்று குடியேற்ற துறை அமைச்சர் Alex Hawke கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3hLhQpf