Breaking News

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கை : Craig Kelly -க்கு TGA எச்சரிக்கை

Legal action against spreading misinformation about the vaccine in Australia. TGA warns Craig Kelly

ஆஸ்திரேலியாவின் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய Craig Kelly, தடுப்பூசிகள் தொடர்பான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் மூலமாக பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கைக்குப் பின்னும் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் Therapeutic Goods Administration எனப்படும் TGA அமைப்பின் வழக்கறிஞர்கள், முறையாக முடிவுகள் வெளிவராத மருந்துகள் குறித்த தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் Craig Kelly க்கு
எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு சென்று சேரும் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் TGA தெரிவித்துள்ளது.

Legal action against spreading misinformation about the vaccineTGA இணையதளத்தில் உள்ள உரிமம் பெற்ற தகவல்களை எடுத்து பகிர்ந்த தாக யுனைடெட் ஆஸ்திரேலிய கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் Craig Kelly மீது புகார் எழுந்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இருந்த முக்கியமான விவரங்களை நீக்கியதாக அக்கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் Craig Kelly அனுப்பிய குறுஞ்செய்திகள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒருவேளை அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டபூர்வமான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் TGA தலைவர் John Skerritt தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட குறுஞ்செய்திகளில் ஆஸ்திரேலியாவின் முத்திரை இருப்பதால் இது தொடர்பாக அரசு சொலிசிட்டர் ஜெனரல் கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று John Skerritt கூறியுள்ளார்.

அதே நேரத்தில் TGA வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கடுமையான அவதூறு பரப்ப பட்டுள்ளதாக Craig Kelly புகார் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களிடம் இருந்து தனக்கு கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் நான் காப்புரிமையை மீறியதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாக கூறியுள்ளார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக சட்டபூர்வ ஆலோசனைகள் பெற வேண்டி இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்றும்
Craig Kelly தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3tYlaSU