Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டுப்போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்ததிருந்தாலும் இந்தியாவில் மகளிர் அணியை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் தலைமையில் டொக்கியோ ஒலிம்பிக் போட்டியில் களம் கண்டது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது, பிறகு பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறினர்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அணியில் இருந்த 7 வீராங்கனைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian women's hockey team is celebrating the women's team in India despite losing to Argentina at the Tokyo Olympicsதன்னுடைய சிறு வயது நினைவுகளை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ராம்பால், வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க தான் அடைக்களம் தேடிய இடம் ஹாக்கி என்று தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் உடைந்த ஹாக்கி மட்டையை வைத்து ,தன்னுடைய பயிற்சியாளரின் உதவியால் ஹாக்கி விளையாட தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இது போன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீராங்கணையின் பின்பும் ஏராளமான வெற்றிக்கதைகளும், வறுமையின் சுவடுகளுடன் கலந்தோடுகிறது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியவுடனான வெற்றிக்கு பிறகு கிரிக்கெட் மீது பிரியம் கொண்ட தேசமாக கருதப்படும் இந்தியாவில், ஹாக்கி மகளிர் அணி மீதும் தங்கள் பார்வை திருப்பியது.

Indian women's hockey team is celebrating the women's team in India despite losing to Argentina at the Tokyo Olympics,.சமூக வலைத்தளங்களில் ஹாக்கி மகளிர் அணியை அனைவரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. ஆனால், இந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் ஹாக்கி அணியை வழி நடத்திய ராம்பால் உட்பட யாரும் மனம் தளரக்கூடாது என்றும் நீங்கள் வழிநடத்திய அணியானது ஒரு திறன்வாய்ந்த அணி என்றும் பாராட்டியுள்ளார்.

அந்த அணி மிகவும் கடுமையாக உழைத்துள்ளது. நீங்கள் அடுத்தக்கட்டத்தை எதிர்நோக்கி நகருங்கள் என்று கூறியுள்ளார். மேலும், வெற்றி, தோல்வி என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றும் அவர் கூறினார்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியை நாளை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3yuWxhU