Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளின் பட்டியல் : தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் நடப்பதாக புகார்

List of vulnerable areas in Sydney and Melbourne, Australia. Vaccination is reported to be slow

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியின் பெரும்பாலான பகுதிகளில் டெல்டா வகை வைரஸின் பாதிப்பு மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி போடாத மக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

List of vulnerable areas in Sydney and Melbourne, Australia. Vaccination is reported to be slow.நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தடுப்பூசி ஓடும் நடவடிக்கையில் பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட அடிப்படையாகக் கொண்டு சிட்னியில் செயல்படுத்த வேண்டும் என்றும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியுடைய இளைஞர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதையும் சுகாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெல்டா வகை வைரஸ் பரவலின் வேகத்தை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதைவிட பன்மடங்காக அதிகரிப்பதே சரியான தீர்வு என்று நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

List of vulnerable areas in Sydney and Melbourne, Australia. Vaccination is reported to be slow,.தடுப்பூசி ஒன்றே நம்மிடம் உள்ள முக்கியமான ஆயுதம் என்றும் நம் வாழ்க்கை முறையை தற்போது ஏற்பட்டிருக்கும் தடைகளை களைவதற்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் பிரிமியர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை தொடக்கநிலை நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதற்குள் 6 மில்லியன் தடுப்பூசி போடுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ப்ரீமியர் Gladys Berejiklian சுட்டிக்காட்டியுள்ளார்.

Link Source: https://ab.co/3fBAhvj