Breaking News

மெல்போர்னில் மியான்மர் ராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்!

மெல்போர்னில் மியான்மர் ராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்!

மியான்மரில் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவு அளிக்கவும், அந்நாட்டு உடனான ராணுவ உறவுகளை ஆஸ்திரேலியா குறைத்துக்கொள்ளவும், அழைப்பு விடுத்து மெல்போனில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு கூடினர்.ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக உலக அரங்கில் குரல் எழுப்ப வேண்டும் எனவும், மியான்மர் ராணுவத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர் Simon sang Hre- கூறினார்.

protest against the change of military regime in Myanmar in Melbourneமியான்மரின் ஆயுதப் படைகள் உடனான தனது ராணுவ உறவுகளை குறைக்க ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான பயிற்சி திட்டத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து மியான்மர் ஆயுதப்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது.

பொருளாதாரத் தடைகள் குறித்து வர்த்தக அமைச்சர் Dan Tehan-கூறுகையில், எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்னர் ஆஸ்திரேலியா நிலைமையை கண்காணித்த பின்பே எடுப்போம் என கூறினார். மேலும் முடிவுகள் எடுப்பதற்கு நாங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வோம், மேலும் அதே போல் எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் எனவும், அவர் கூறினார்.

டாக்டர் Roger Lee Haung-கூறியதாவது, மியான்மருடன் எங்களுக்கு வலுவான பொருளாதார முதலீடுகள் எதுவும் இல்லை எனவும், கடந்த காலத்தில் பொருளாதாரத் தடைகள் தோல்வியுற்றன எனவும், மேலும் இது ஒருபோதும் ராணுவத்தின் நடவடிக்கைகளில் தாக்குதலை ஏற்படுத்தவில்லை எனவும் கூறினார்.

ஆஸ்திரேலியா மியான்மர் ராணுவத்தில் இருந்து ராணுவ உறவை இடை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அது அவர்களுக்கு கூடுதல் சட்டபூர்வ தன்மையை கொடுக்கும் என்று கூறினார் .