Breaking News

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில், திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான M.K.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

M.K. Stalin's

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறையும் பல இடங்களில் சோதனை நடத்திவருகிறது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். 9 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேர சோதனையின் முடிவில் வீட்டுச்செலவுக்காக வைக்கப்பட்டிருந்த 1,36,000 ரூபாய் மட்டுமே சிக்கியதாக வருமான வரித்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

raidஇந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சலசலப்புக்கு திமுக அஞ்சாது என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை உள் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்