Breaking News

எகிப்து சூயஸ் கால்வாய் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடை ஈடுகட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளதால், எவர் கிவன் கப்பல் அந்நாட்டில் இருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Egypt's Suez Canal has been forced to leave the country as $ 1 billion in damages have been demanded to compensate for the economic downturn caused by the stagnation of the Suez Canal.

எகிப்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் வழி தடமான சூயஸ் கால்வாய் சர்வதேச நாடுகளுக்கிடையே நடைபெறும் கடல் வாணிபத்தின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்த எவர் கிவன் சரக்கு கப்பல் ,கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டதால் சுயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Egypt's Suez Canalநூற்றுக்கணக்கான ஊழியர்களின் முயற்சியாலும், இராட்சத உபகரணங்களின் உதவியாலும் எவர்கிவன் கப்பல் சுயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. இதில் பயண்படுத்தபட்ட ஊழியர்களுக்கும், பயன்படுத்தப்பட்ட உபகரணங்களின் வாடகை, போக்குவரத்து தடைப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்கவேண்டும் சுயஸ் கால்வாயின் நிர்வாக இயக்குனர் Osama Rabie தெரிவித்துள்ளார்.

ஆனால் யாரிடம் இருந்து இந்த இழப்பீடு பெறப்படும் என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

Egypt's Suez Canal 1இரண்டு அல்லது மூன்று நாட்களில் இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு முடியும் வரை கப்பல் எகிப்து நாட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுயஸ்கால்வாயின் மற்றொரு பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த எவர் கிவன் கப்பலை, தைவானை சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கிவருகிறது. ஜெர்மனை சேர்ந்தவர்கள் இக்கப்பலை நிர்வகித்து வந்தாலும்,இக்கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.