Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 91 ஆயிரத்து 928 பேருக்கு தொற்று பாதிப்பு : 22 பேர் உயிரிழந்த நிலையில் ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் தொற்று பாதிப்பு அதிகம் பதிவாவதாக மாகாண அரசு தகவல்

பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளிலிருந்து மேற்கொள்ளும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மூலமாக மாகாணத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளில் எண்ணிக்கையே ஒட்டுமொத்த தொற்று பாதிப்பில் பெரும் பங்கு வகிப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரேநாளில் 91 ஆயிரத்து 928 பேருக்கு வைரஸ் பாதிப்பு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 61 ஆயிரத்து 387 பேர் ஆன்டிஜென் பரிசோதனை மூலமாக தொற்று பாதிப்பை பதிவு செய்தவர்கள் ஆவர். இன்னும் ஒரே நாளில் 20 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

In the state of New South Wales, Australia, 91,928 people were infected in a single day, 22 people died, according to the Rapid Antigen Test.இந்நிலையில் வீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மூலமாக அடுத்தடுத்து தொடர்ந்து பார்க்கும் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும், அதன் மூலம் உறுதி செய்யப்படும் முடிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு முடிவுகளை உடனுக்குடன் பதிவு செய்யாவிட்டால் ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை ஜனவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

In the state of New South Wales, Australia, 91,928 people were infected in a single day 22 people died, according to the Rapid Antigen Testதொற்று பாதிப்பு முடிவுகளை மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அபராதம் விதிக்கப்படும் இதன் மூலமாக பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண அரசு மேற்கொள்வதற்கான எளிமையான வழிகள் பிறக்கும் என்றும் வாடிக்கையாளர் சேவை துறை அமைச்சர் Victor Dominello கூறியுள்ளார். 2383 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும், நிலையில் அவர்களில் 182 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 63 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 21.6 சதவீதம் பேர் மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டிருப்பதாகவும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக விரைந்து செலுத்தி கொள்ளுமாறும், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அதனையும் செலுத்தி கொள்ளவும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3FpbiWn