Breaking News

ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா வில் ஒரே நாளில் 1100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி : 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒருவர் அனுமதி

In Tasmania, Australia, 1,100 people were confirmed infected in a single day. 23 more were hospitalized and another was admitted.

தாஸ்மானியாவில் முந்தைய நாள் பாதிப்பான 1583 இல் இருந்து சற்று குறைந்து 1100 என்ற அளவில் ஒருநாள் தொற்று பாதிப்பு பதிவானது.

மேலும் மருத்துவமனைகளில் 23 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதிதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் 10 பேருக்கு கூடுதல் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மூலமாகவே தொற்று பாதிப்பு பதிவு அதிகம் வருவதாகவும், பிசிஆர் பரிசோதனைகள் 250 என்ற அளவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் தாஸ்மானியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 969 என்ற தொற்று பாதிப்பு அளவில், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 985 பேர் தனிமைப்படுத்துதலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 847 பேர் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும், 253 பேர் பிசிஆர் பரிசோதனை மூலமாகவும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

In Tasmania, Australia, 1,100 people were confirmed infected in a single day. 23 more were hospitalized and another was admitted.இந்லையில் கடந்த 2 நாட்களில் 15 ஆயிரத்து 550 ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் வினியோகிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒட்டுமொத்த தாஸ்மானியா மக்கள் தொகையில் 80 % பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிகளை திறப்பது தொடர்பாக தேசிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தாஸ்மானியா சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தாஸ்மானியா கல்வித்துறை அமைச்சர் Sarah Courtney, பள்ளிகளில் 800 காற்று சுத்தப்படுத்தும் கருவிகளை வாங்கி வைக்கவேண்டும் என்றும், மாணவர்களுக்கு காற்றின் மூலம் பரவும் பிரச்சனைகளை தடுக்கும் வகையில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் தொற்று பாதிப்பு அதிகம் பதிவாகி வரும் நேரத்தில் பள்ளிகள் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மேற்கொள்ளவேண்டிய தளர்வுகள் மற்றும் அதற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு, அந்தந்த மாகாணங்களின் தொற்று பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/31Wz5PM