Breaking News

தடுப்புக் காவலில் இருந்து ஜோகோவிச் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பிலோலா குடும்பம் அமைச்சருக்கு கோரிக்கை : மீண்டும் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என புகலிடம் கோரும் தமிழ்க் குடும்பம் வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் விசா விவகாரம் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ஒரே உத்தரவில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் ஜோகோவிக் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோரும் தமிழ் குடும்பம் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று முருகப்பன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் Carina Ford குடியமர்வு துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட நடேசன் பிரியா குடும்பம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அவர்களின் நான்கு வயது மகள் தாருனிகா வின் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள் இன்னும் ஊர் திரும்பாத நிலையில் கடந்த ஆண்டு விசா வழங்கிய குடியமர்வு துறை முருகப்பன் பிரியா மற்றும் மூத்த மகள் கோபிகாவுக்கு மட்டுமே விசா வழங்கியது. கடுமையான உடல்நல பாதிப்பை சந்தித்த சிறுமி தாருனிகா வுக்கு விசா மறுக்கப்பட்டது.

Following Djokovic's release from detention, Biloela's family appeals to minister. Tamil family seeks asylum to be allowed back to Christmas Island.பிலோலா தீவுக்கு திரும்பிச் செல்வதற்கான கோரிக்கையை தொடர்ந்து அந்த குடும்பம் முன்வைத்து வரும் நிலையில் இது தொடர்பான கோரிக்கையை அவர்களது வழக்கறிஞர் Carina Ford குடியமர்வு துறை அமைச்சரிடம் மீண்டும் முன்வைத்துள்ளார். கோவில் பாதிப்பு களுக்கு இடையே தொடர்ந்து தடுப்பு காவலில் இருந்து வரும் குடும்பத்தை திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இரண்டு சிறுமிகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோகோவிச் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை தீவிரமாக முன் வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் குறிப்பிட்ட குடும்பத்தின் விவகாரம் தொடர்பாக குடிவரவுத்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் நியாயமான முடிவுகள் கிடைக்கும் வகையிலேயே அரசு செயல்பட்டு வருவதாகவும் குடியமர்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு புகலிடம் கோரும் குடும்ப விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இரண்டு சிறுமிகளின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிரியா நடேஸ் தம்பதியினரின் வழக்கறிஞர் Carina Ford
கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3nieyN7