Breaking News

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியிலும், உலக நாடுகள் பல தங்களின் ராணுவ பலத்தை அதிகரிக்க பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்கிவருகின்றன.

In the midst of the corona virus outbreak, many countries around the world are allocating billions of dollars to increase their military strength,.

அந்த வகையில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் முதல் 20 நாடுகளின் விவரத்தை பார்க்கலாம்.

நேட்டோ உறுப்பினராக உள்ள நெதர்லாந்து ஒவ்வொரு வருடமும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்த $16.2 பில்லியன் நிதியை ஒதுக்கி வருகிறது.

ஆப்கனிஸ்தான் அமைதிப் படையில் நெதர்லாந்து படைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது

ரஸ்யாவுக்கும், பெலாரஸுக்கும் இடையே அமைந்துள்ள போலந்து ஒவ்வொரு ஆண்டும் $16.8 பில்லியன் நிதியை ஒதுக்கி 19 ஆம் இடத்தில் உள்ளது.

18 ஆம் இடத்தில் ஈரான் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பலமிக்க நாடாக கருதப்படும் ஈரான் படையில் சுமார் 10 லட்சம் போர் வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் $20.4 பில்லியன் நிதியை ராணுவத்துக்கு ஈரான் ஒதுக்கிவருகிறது.

ஸ்பெயின் தங்களின் ராணுவத்துக்கு சுமார் $22.4 பில்லியன் ஒதுக்கி 17 ஆம் இடத்தில் உள்ளது.

16 ஆம் இடத்தில் துருக்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் $22.8 பில்லியன் நிதியை தன்னுடைய ராணுவத்துக்கு இந்த நாடு ஒதுக்கி வருகிறது.

$25.4 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி பிரேசில் 15 ஆம் இடத்திலும் , அனு அயுத வலிமை மிக்க நாடாக கருதப்படும் இஸ்ரேல் 14 ஆம் இடத்தில் உள்ளது.
இஸ்ரேல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் $28 பில்லியன் நிதியை தன்னுடைய ராணுவத்துக்கு ஒதுக்கி வருகிறது.

13 ஆம் இடத்தில் கனடா உள்ளது.

In the midst of the corona virus outbreak. many countries around the world are allocating billions of dollars to increase their military strength12 ஆம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியா இந்தோ பசிபிக் பகுதியில் வலிமை மிக்க நாடாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் $35.5 பில்லியன் நிதியை ஒதுக்குகிறது. உயர் தொழில் நுட்பத்துடன் இருக்கும் ஆஸ்திரேலிய ராணுவம் பெரிய நாடுகளை விட கூடுதல் நிதியை ராணுவத்துக்கு ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது. $36.1 பில்லியன் நிதி ஒதுக்குவது மூலமாக இத்தலி 11 ஆம் இடத்தில் உள்ளது.

10 ஆம் இடத்தில் தென் கொரியா உள்ளது. வடகொரியாவுடன் நிலவும் மோதல் போக்கு தென்கொரிய ராணுவத்தை வலுவாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை தென்கொரியாவுக்கு ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்கொரியா தன்னுடைய ராணுவத்துக்கு $59 பில்லியன் நிதியை ஒதுக்குகிறது.

9 ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் $63.4 பில்லியன் நிதியை ராணுவத்துக்கு செலவழிக்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி முறையே 8 மற்றும் 7 ஆம் இடங்களை பிடித்துள்ளன.

எண்ணெய் வளமிக்க நாடாக கருத்தப்படும் சவுதி அரேபியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் $74.3 பில்லியன் நிதியை ஒதுக்கி 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பிரிட்டன் 5 ஆம் இடத்திலும் , ரஷ்யா 4 ஆம் இடத்திலும் உள்ளது. ரஷ்யா $79.7 நிதியை ஒதுக்கினாலும், அடுத்த தலைமுறை ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

In the midst of the corona virus outbreak, many countries around the world are allocating billions of dollars to increase their military strength.3 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாக்கிஸ்தானுடன் அந்த நாட்டுக்கு இருக்கும் மோதல் போக்கு காரணமாக ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய தேவை அந்த நாட்டுக்கு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்தியா $94.2 பில்லியன் நிதியை ஒதுக்குகிறது. 2 ஆம் இடத்தில் சீனா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் $325.7 பில்லியன் நிதியை தன்னுடைய ராணுவத்தை மேம்படுத்த சீனா ஒதுக்கிவருகிறது. அதி நவீன விமானங்கள் சீனாவின் ராணுவத்தில் உள்ளது.

முதல் இடத்தில் உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா உள்ளது. அதன் படி $1.01 டிரில்லியன் நிதியை அமெரிக்கா ராணுவத்துக்கு ஒதுக்கி வருகிறது. தன்னுடை நாடு மட்டுமல்ல உலகின் சுமார் 800 இடங்களில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமான படை அமெரிக்க வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3go9B0C