Breaking News

ஆஸ்திரேலியாவில் பிறந்த பச்சிளங்குழந்தை பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது : பெற்றோர்கள் விமானம் மூலமாக பயணம் செய்து வந்ததை அடுத்து சுகாதாரத்துறை நடவடிக்கை

Australian-born baby isolated from parents, Health action after parents travel by plane

சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து கத்தாரில் இருந்து ஆஸ்திரேலியா வருவதற்காக Moe, Sarah Haidar தம்பதியர் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தோஹாவிலிருந்து மெல்போர்ன் வரும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆறு வாரங்கள் கழித்து தோஹாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் வருவதற்கான விமானம் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. Sarah Haidar கருவுற்றிருந்த நிலையில் அவர்கள் மெல்போர்னில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் மே 29-ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள ராயல் பிரிஸ்பேன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக Sarah Haidar -க்கு விலக்கு அளிக்கப்பட்டது. 30 வாரங்கள் முடிந்திருந்த நிலையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே ஜூன் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை முறையில் Sarah Haidar-க்கு ஆண் குழந்தை பிறந்தது. 30 வாரங்களிலேயே பிரசவம் கடும் சிக்கலான நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து உடனடியாக சிசேரியன் முறையில் குழந்தையை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Australian-born baby isolated from parents. Health action after parents travel by planeஇதனையடுத்து குழந்தை பிறந்த மறுநிமிடமே தாயிடம் இருந்து தனிமைப் படுத்தப் பட்டது அவரது தந்தை Moa Haidar வீடியோ காலில் வாயிலாக மட்டுமே குழந்தையை பார்க்க அனுமதிக்கப்பட்டது. குழந்தை எப்படி இருக்கிறது என்பதைக்கூட பார்க்க முடியாத நிலைக்கு தாய் Sarah Haidar தள்ளப்பட்டார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைமை சுகாதார அதிகாரி உள்ளிட்டோருக்கு Moa Haidar கோரிக்கை விடுத்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்து தங்களை தங்கள் குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், முறையான பாதுகாப்பு கவசங்களோடு பரிசோதனைக்கு பின்னர் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் உறுதியாக குழந்தையை பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. தனிமைப்படுத்துதல் முடியும் வரை பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை மருத்துவமனையிலேயே கண்காணிக்கவும் சுகாதாரத் துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றுதான் என்றாலும் பிறந்த குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Link Source: https://ab.co/3g7Juwl