Breaking News

எனது அரசாங்கத்தில் எப்போதும் பெண்கள் பலம் இருக்க விரும்புகிறேன் : பிரதமர்

I always want women to be a strength in my government says australia Prime Minister

Prime Minister Scott Morrison தனது அமைச்சரவை மறுசீரமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். இது நாடு மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் ஒரு தீர்வாக இருக்கலாம்.

linda reynolds newபுதிய அமைச்சரவையில் Christian Porter-ருக்கு பதிலாக, Attorney-General and Industrial Relations Minister ஆக Michaelia Cash பதவி வகிப்பார். மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். Linda Reynolds பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்பபடுத்தும் பொறுப்பு வகிப்பார்.

இது குறித்து பிரதமர் Scott Morrison கூறுகையில், எனது அரசாங்கத்தில் எப்போதும் ஓங்கி குரல் கொடுக்கும் சக்தி வாய்ந்த பெண்கள் இருக்க விரும்புகிறேன். இன்று பல புதிய அறிவிப்புகள், புதிய குறிக்கோள்கள் மற்றும் அரசாங்கத்தின் எல்லாவிதமான வளர்ச்சிக்கும் நல்லது செய்யும் விதத்தில் இருக்கும். Inter-Parliamentary Union (IPU) வின்படி 2018 ஆஸ்திரேலியா 48வது இடத்தில் பாராளுமன்ற பாலின பாகுபாட்டில் இருந்தது என்றார்.

Leader of the Opposition Anthony AlbaneseLeader of the Opposition Anthony Albanese தனது ட்விட்டரில், பல பெண்கள்அமைச்சர் பதவியில் இருப்பதால் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் வராது. மறுசீரமைப்பால் மாரிஸன் அரசாங்கம் ஆஸ்திரேலியர்களை கையாண்ட மிக மோசமான நிலைமை மாறி விடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Shadow minister for women Tanya Plibersek கூறுகையில், இது செயலில் நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.Ms Bergin கூறுகையில், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். இப்போது சரியான பாதையில் அரசாங்கம் செல்கிறது. இது சாத்தியமாக வேண்டும் என்றால் பெண்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் முதலில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல இடங்களில் பெண்களுக்கு இன்னும் குறைந்த அளவிலேயே பாதுகாப்பு உள்ளது என்றார்.

பெண்களை திருப்திப்படுத்தவே இவையெல்லாம் என்று Dr Stewart Jackson கூறினார். மோரிசன்,தன்னுடைய அரசாங்கம் பெண்களின் வளர்ச்சி, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை விரும்புவதாகவும், இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் எனவும் கூறினார் .Ms Bergin இதுவரை பெண்களுக்கான பிரச்சனை எதுவும் தீர்க்கப்படவில்லை. ஏனென்றால் முக்கிய பதவியில் ஆண்கள் இருந்ததே காரணம் .அதனால் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.