Breaking News

Brisbane-னுக்கு வந்த NSW குடியிருப்பாளர்களுக்கும் ஊரடங்கு பொருந்தும் !

The lockdown also applies to NSW residents who visited Brisbane

கடைசி 9 நாட்களுக்கு Brisbane-ணுக்குள் வந்த NSW குடியிருப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த ஊரடங்கு பொருந்தும் என்று NSW ஹெல்த் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். UK தொடர்புடைய தொற்று Greater Brisbane-னுக்குள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Brisbane, IpswichBrisbane, Ipswich, Moreton Bay, Logan, மற்றும் Redlands ஆகிய பகுதிகளுக்கு இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. NSW-வில் எந்த ஒரு புது தொற்றும் இல்லை. The Byron Beach Hotel மற்றும் The Farm போன்ற இடங்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் வந்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.அந்த இடங்களுக்கு சென்று வந்த யாராக இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

NSW-வில் உள்ள Byron Bay இடத்திற்கு கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஈஸ்டர் பண்டிகை காரணாமாக யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் Gladys Berejiklian உத்தரவிட்டுள்ளார்.மார்ச் 26 வெள்ளிக்கிழமை அன்று Byron Beach-க்கு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சென்றவர்களும்,மார்ச் 28 ஞாயிறு அன்று The Farm Byron Bay-க்கு காலை 8.45 முதல் 10.30 மணி வரை சென்றவர்களும் ,மார்ச் 27 சனிக்கிழமை அன்று Mokha Cafe, Byron Bay காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை சென்ற அனைவரும் தங்களை தனிமை படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

The lockdown also applies to NSW residentsNSW விமான நிலையம் வழியாக திரும்பி வருபவர்களுக்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது NSW இல் மொத்த கொரோனா பாதிப்பு வழக்குகளின் எண்ணிக்கையை 5,094 -ஆக உள்ளது .