Breaking News

கிழக்கு கடற்கரை பகுதிகளில் தொடரும் கனமழை : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, தீவான நகரங்கள், நீரில் மூழ்கிய பயிர்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டடோரியா, நியூசவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாகாணங்களின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெய்து வரும் அதி கன மழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Byron Bay, Coonamble மற்றும் Gunnedah பகுதிகளில் ஒரே இரவில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் Wagga Wagga பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rains continue along the east coast. floods in rivers, island towns, submerged crops.Cessnock, Richmond, Bathurst, Tuggeranong, Cooma மற்றும் Coonabarabran பகுதிகளில் இரவு நேரத்தில் 50 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. சிட்னியின் வடமேற்கு நகரங்களான Richmond, Pitt Town –ல் கடும் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் இயல்பை விட 49 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. South Windsor பகுதியில் சாலைகள், நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சிட்னியின் நேப்பியன் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் Bundaberg பகுதியில் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் மழைப்பொழிவு இதே அளவில் தொடரும் என்றும் வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rains continue along the east coast. floods in rivers, island towns, submerged crops..விக்டோரியாவின் East Gippsland பகுதியில் Combienbar உள்ள மழைப்பதிவு மையத்தில் ஒரு இரவில் மட்டும் 55 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மாகாணத்தின் உச்சபட்ச மழைப்பொழிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Packsaddle Station –ல் 175 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களாக மழை வெள்ளத்தை ரசிக்காத குழந்தைகள் மழையில் விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Heavy rains continue along the east coast. floods in rivers, island towns, submerged crops,.அதே நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக 10 முதல் 100 சதவீதம் அளவுக்கு பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், தீவனம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட இடங்களில் மழைப்பொழிவு தொடரும் என்று வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர்நிலைகள், விவசாய நிலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3FXz4t2