Breaking News

இலங்கையில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு : காணாமல் போனவர்களை தேடும் பணியை நிறுத்தியது கடற்படை

10 killed in boat capsize in Sri Lanka. Navy suspends search for missing persons

கிழக்கு இலங்கையின் Kinniya நகரத்தில் Lagoon பகுதியிலிருந்து Kurichakeni இடத்திற்கு சென்று கொண்டிருந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தண்ணீரில் இருந்து இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது நடைபெற்று வந்த மீட்புப் பணியை நிறுத்தி உள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

10 killed in boat capsize in Sri Lanka. Navy suspends search for missing persons.படகில் 35 பேர் வரை பயணம் செய்ததாகவும் அதில் பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் Nihal Thalduwa கூறியுள்ளார். கடற்படையைச் சேர்ந்த 8 குழுக்கள் மற்றும் கிராமத்தினர் உள்ளிட்டோர் தண்ணீரில் தத்தளித்த அவர்களை மீட்டு வந்ததாகவும் , ஆனால் தற்போது மாயமானவர்களின் நிலை எதுவும் தெரியாததால் மீட்பு பணியை நிறுத்தி உள்ளதாக Nihal Thalduwa
கூறியுள்ளார்.

இலங்கையில் படகு விபத்துக்கள் பெரும்பாலும் நடப்பதில்லை என்றும், இணைப்பதற்கு மேம்பாலங்கள் இருப்பதால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து எதிர்பாராத ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நகரங்களை இணைக்க கூடிய பகுதி என்பதால் அங்கு பெருமளவு மக்கள் நடமாட்டம் இருக்கும் என்றும் மக்கள் அந்த எல்லைப்பகுதியை கடப்பதற்காக பரிசல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருவதாகவும் Kinniya பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த விபத்திற்கு அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டி அந்த பகுதி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அருகே டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Link Source: https://ab.co/3CSxeYG

leave a reply