மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் கடும் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் Gregory நெடுஞ்சாலையில் சென்ற Ute வகை வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை ஓட்டிச்சென்ற நபர் உயிரிழந்தார். North of Emerald பகுதியில் இருந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற பேரிடர் கால மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் கார் மற்றும் அதில் சென்ற நபரின் சடலத்தை மீட்டனர். அந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
விபத்து நடைபெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் இயல்பை விட அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சராசரியாக 150 மில்லி மீட்டர் மழை பதிவாகும் நிலையில் 270 மில்லி மீட்டர் மழை ஒரே இரவில் பொழிந்தது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்றும் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்று மத்திய குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Mayor Kerry தெரிவித்துள்ளார். மேலும், மழைவெள்ள பாதிப்புகளை கண்காணிக்க பல்வேறு பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் எந்தவித அறிவிப்பும் இன்றி சாலையில் பயணிக்கும் நபர்கள் இதுபோன்ற இடர்களை சந்திப்பதாக Mayor Kerry கூறியுள்ளார்.
மக்கள் அவர்களாக நிலைமையை கணித்துக் கொண்ட மழை வெள்ள பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என்றும், பொறுமையுடன் தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் ப்ரீமியர் Mayor Kerry கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக இரவு நேரத்திலேயே பெரும்பாலான மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து விட்டதாக பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் Glenn Bell கூறியுள்ளார். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், Rubyvale பகுதியில் இருந்து சிலரை வெளியேற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை தங்களது குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும் Glenn Bell தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3pbuJvK