Breaking News

மேற்கு ஆஸ்ரேலியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை : சமூகப்பரவல் மூலம் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson அறிவிப்பு

Health Minister Amber-Jade Sanderson announces that 24 more people have been confirmed infected by the social outbreak. the spread of the omega-3 virus in Western Australia could not be controlled.

மேற்கு ஆஸ்ரேலியாவின் பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவது சவலாக உள்ளதாகவும், ஏற்கனவே 90 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 24 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson கூறியுள்ளார்.

Health Minister Amber-Jade Sanderson announces that 24 more people have been confirmed infected by the social outbreak. the spread of the omega-3 virus in Western Australia could not be controlled24 பேரும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒமைக்ரான் தொற்றை தவிர்த்து விட்டு செல்வது சாத்தியமில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தலைமை சுகாதாரத்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் படி ஒமைக்ரான் தொற்று பாதிப்பு சமாளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்று பாதிப்பின் பரவல் அதிவேகமாக இருப்பதால் இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஞாயிறு ஒரு நாளின் முடிவு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson கூறியுள்ளார்.

சனிக்கிழமை ஒரே நாளில் 4876 பேருக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதே தற்போதுள்ள சூழலை கட்டுப்படுவதற்கான ஒரே வழி என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பெர்த் –ல் உள்ள Fiona Stanley மருத்துவமனையில் 5 குடும்பங்கள் மற்றும் சில பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு தாய் மற்றும் குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்னர்.

Health Minister Amber-Jade Sanderson announces that 24 more people have been confirmed infected by the social outbreak. the spread of the omega-3 virus in Western Australia could not be controlled,மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் முழு உடல் கவசம் மற்றும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும்,பரிசோதனை முடிவுகள் நெகடிவ் என வரும் வரை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டதாகவும், வாண வேடிக்கை கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்றும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson, தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை தாண்டி பெரிய அளவில் ஒன்று கூடல் நிகழ்வுகள் நடக்கவில்லை என்றும் அதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/342jP4C