Breaking News

பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து Swimming ஆஸ்திரேலியா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது

The Swimming Australia organization has published a report on the treatment of women and girls

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை  Maddie Groves பெண் வெறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்த புகாரைத் தொடர்ந்து ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

The Swimming Australia organization has published a report on the treatment of women and girlsநீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு துறைகளிலும் பங்கேற்கும் அனைவருக்கும் எந்தவிதமான மோசமான அனுபவங்களும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை அறிக்கையில் ஸ்விம்மிங் ஆஸ்திரேலியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

⏹️ கிராமி விருது பெற்ற நடிகர் Meat Loaf காலமானார் அவருக்கு வயது 74. அவர் உயிர் இழப்பதற்கு முன்பாக மனைவி மற்றும் அவரது இரு மகன்கள் அவரை சந்தித்த நிலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Meat Loaf உயிர் இறப்புக்கான காரணம் குறித்த விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

⏹️ கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் ஆஸ்திரேலிய தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் தடுப்பூசிகள் பிள்ளைப்பேறு பாதிப்பதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை என்றும், இதற்கு தொற்று காரணமாக ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவை மாற வேண்டும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

⏹️ தெற்கு ஆஸ்திரேலியாவில் தன்னார்வல தீயணைப்பு வீரர்கள் இருவர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பகுதியில் மரங்கள் விழுந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் மாகாண தீயணைப்பு படை இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

The Swimming Australia organization has published a report on the treatment of women and girls..இந்தியாவில் தேசிய வனவிலங்கு பூங்காவில் ஒரு யானை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இரட்டை யானை குட்டிகளில் ஒன்று பெண் மற்றும் மற்றொன்று ஆண் யானை ஆகும். இரண்டு யானை குட்டிகளும் எந்தவிதமான பாதிப்பு இன்றி உயிர் வாழ வேண்டும் என்று வன விலங்கு பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். குட்டிகளை ஈன்று உள்ள இடத்தில் தாய் யானையும் மற்றொரு பெரிய யானையும் இருப்பதால் அங்கு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியில் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் தாய் யானை இரண்டு குட்டி யானைகளுக்கும் பாலூட்டும் வகையில் உடல்நிலை யோடு இல்லை என்று யானை பராமரிப்பாளர் Douglas-Hamilton தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு இதே போன்று இரண்டு குட்டிகளை அந்த யானை சென்றதாகவும் ஆனால் சில நாட்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் Douglas-Hamilton கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3qP6ZPU