Breaking News

வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் தடுப்பூசிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் : பேரணியின் போது காவல்துறையினரை தாக்கியதாக 3 பேர் கைது

Anti-vaccine protest in northern Queensland. 3 arrested for assaulting police during a rally

வடக்கு குயின்ஸ்லாந்து Mackey பகுதியில் உள்ள  Bluewater Quay பூங்காவில் இருந்து தடுப்பூசிக்கு எதிரான பேரணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விடுதலை பேரணி என பெயரிடப்பட்ட இதில் ஏராளமானோர் கலந்து கொள்ள வந்திருந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கிருந்து ஒரு பிரிவினர் பிரிந்து மத்திய கேன்லேண்ட் ஷாப்பிங் மையத்தை நோக்கி பேரணியாக நடக்க தொடங்கினர். Mastura Drive பகுதியிலும் இதே போன்ற பேரணி நடத்தப்பட்ட நிலையில் அனுமதி இன்றி ஒன்று கூடுவது சட்டவிரோதமானது என போலீசார் எச்சரித்தனர்.

இதனிடையே பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும் குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து இருப்பதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டக் குழுவினர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Anti-vaccine protest in northern Queensland. 3 arrested for assaulting police during a rally.வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்ற தடுப்பூசிக்கு எதிரான போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காவல்துறையினரை தாக்க முயன்று முழக்கங்களை எழுப்பிய முறையே 59, 38 மற்றும் 52 வயதான 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் Mackey மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் குறித்து சிசிடிவி கேமரா மற்றும் காவலர்கள் உடலிலிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தொற்று பரவலுக்கு காரணமாக இருந்த போராட்டக்காரர்கள் மீது அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்து அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்பது தொடர்பான கருத்துக்களை அவர் மறுத்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும், பெருந்தொற்று காலத்தில் போராட்டத்தை அனுமதிப்பது அரசின் நோக்கம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/33LPOGm