Breaking News

மெல்பேர்னில் நடந்த நிகழ்வில் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற வீராங்கனை ஜகாரா ஆண்டனிக்கு சிறந்த தடகள வீரங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Olympic gold medalist Zakara Antony has been awarded the Best Athlete award at an event in Melbourne.

நடப்பாண்டில் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் சர்வதேசளவில் அடையாளம் பெற்ற வீராங்கனையாக பிரபலமானார் ஜகாரா ஆண்டனி. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஸ்னோ ஆஸ்திரேலியா விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜகாரா ஆண்டனி, இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் என்னுடைய பெற்றோரும் பயிற்சியாளர்களும் தான். இந்தாண்டில் மட்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம், இரண்டு கிறிஸ்டல் குளோப் விருதுகள் மற்றும் ஸ்னோ ஆஸ்திரேலியா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.