Breaking News

ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மரபணு சோதனை மூலம் இங்கிலாந்து மாறுபட்ட தொற்று இருப்பது உறுதி..உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவிற்கு மாற்றம் !

Victorian Premier Daniel Andrews

சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இங்கிலாந்தின் மாறுபட்ட கொரோனா வைரஸ் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததை தொடர்ந்து,அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

Genetic testing confirms hotel quarantine worker has UK variant and moved to ICUமெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள ஹாலிடே விடுதியில் பணிபுரிந்த அந்தப் பெண்ணிற்கு, குடும்பம் மற்றும் நண்பர்கள் உட்பட 8 முதன்மை தொடர்புகளையும், 136 பணி சார்ந்த தொடர்புகளையும் கொண்டிருந்தார். ஹாலிடே விடுதியில், பணியாளர்களின் தொடர்புகளில் 12 ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை வீரர்களும் மற்றும் 9 போலீசும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

விக்டோரியாவில் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மற்றும் சர்வதேச நோய்த்தொற்றுகள் எதையும் உறுதிப்படுத்தவில்லை .மாநிலத்தில் 12,816 சோதனைகளைத் தொடர்ந்து, 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Brighton மற்றும் Clayton-ல் புதிய Pop-up சோதனை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் திங்கள் முதல் எட்டு இடத்தில் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட உள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பாதிக்கப்பட்ட பெண், எந்த தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் மீறியதாக தெரியவில்லை என அவசர சேவைகள் அமைச்சர் Lisa Neville கூறினார்.

மேலும் விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.