Breaking News

கொரோனா தடுப்பூசி சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா வந்தடையும் – பிரதமர் உறுதி !

The corona vaccine will arrive in Australia

ஆஸ்திரேலியாவுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது, EU கட்டுப்பாடுகளால் தாமதம் ஆகாது என ஆஸ்திரேலியாவிற்கான European Union’s ambassador Michael தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் (Eu) Covid – 19 தடுப்பூசி ஏற்றுமதியில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. ஏற்றுமதி கட்டுப்பாடு என்பது மருத்துவ கம்பெனிகள் ஐரோப்பியா அல்லாத நாடுகளுக்கு மருந்தை ஏற்றுமதி செய்ய போகிறது என்றால், அத்திட்டத்திற்கு அங்கீகாரம் பெற வேண்டும். இது தடுப்பூசி விநியோகத்தை கண்காணிப்பதற்கான ஒரு அங்கீகார முறை. இது ஏற்றுமதிக்கு தடையில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பியாவில் உற்பத்தியாகும் Pfizer/Biontechன் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியை ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. வெளிப்படை தன்மையை அதிகரிக்க மட்டுமே போடப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்த உற்பத்தி தடைபடாது. மேலும் Brussels ல் உள்ள எங்களது colleagues ஆஸ்திரேலியாவில் உள்ள பங்குதாரர்களுக்கு அங்கீகார செயல்முறை அமைதியாகவும், சீராகவும் இருக்கும். கொரோனா தடுப்பூசி மருந்தான Pfizer/Biontech விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றடையும் என்பதை கூறுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

Prime Minister Scott Morrison கூறுகையில் : கொரோனா தடுப்பூசி சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா வந்தடையும். பிப்ரவரி மாதத்தில் இறுதியில் தடுப்பூசி போடும் பணி துவங்கும். 80,000 பேருக்கு தடுப்பூசி போடுவதே குறிக்கோள். இதில் முன்கள பணியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.