Breaking News

அமெரிக்காவில் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிந்ததனர்.

Four people have been killed in a 12-storey building collapse in Miami, USA,

பிளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 130 வீடுகள் இருந்தது. இங்கு சுமார் 80 வீடுகளில் மக்கள் வசித்து வந்ததாக தெரிகிறது.

இக்கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது , கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது இக்கட்டடத்தில் வசித்து வந்தவர்களில் 159 பேர் காணவில்லை என்றும், இடிபாடிகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியளர்களிடம் பேசிய மியாமி நகர மேயர், Daniella Levine Cava இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்

காவல் துறை இயக்குனர் பிரெடி ராமிரெஸ் கூறும் போது, காயமடைந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Four people have been killed in a 12-storey building collapse in Miami, USAகட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை கண்டறியும் பணி முழு வீச்சில் தொடர்வதாகவும், தீயணைப்பு துறை அதிகாரி ரேய் ஜாடலாய் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் எழுப்பும் சிறு ஒளியையும் துல்லியமாக கவனித்து வருவதாகவும்,தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மீட்பு படையினர் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றுவதால், உயிரோடு இருப்பவர்கள் எழுப்பும் சிறு ஒளியை கண்டும் எளிதில் அடையாளம் கண்டு மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளார்

விபத்தை நேரில் பார்த்தவர்கள், சாம்பிளின் கட்டடம் சீட்டு கட்டு சரிவது போல சரிந்ததாக தெரிவித்துள்ளனர். கட்டட விபத்துக்கான காராணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கட்டட மறு சீரமைப்பு பணியும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Four people have been killed in a 12-storey building collapse in Miami, USA.கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிளோரிடா மாகாண அரசுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தள்ளார் விபத்து நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Link Source: https://ab.co/35VGxJ7