Breaking News

சிட்னியின் பிரபல சலூன் கடை கொரோனா சமூகப் பரவல் மையமாக மாறும் அபாயம் : தொற்றுப் பரவல் பட்டியலில் 900 பேருக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல்

Bondi Cluster சமூக பரவல் அதிகரித்ததன் காரணமாக சிட்னியின் பல்வேறு ஊரகப் பகுதிகள் தொற்று பரவல் மையங்களாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலையில் சிட்னியின் Double Bay-ல் உள்ள பிரபல முடி திருத்தும் நிலையமான Joh Bailey -ல் பணியாற்றிய 3 முடிதிருத்தும் ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் அங்கு வாடிக்கையாளர்களாக வந்து சென்றவர்களில் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து வந்து சென்றவர்களின் தொடர்பு பட்டியல் சுகாதாரத் துறையின் மூலம் தயார் செய்யப்பட்டது.

Sydney's popular saloon shop is at risk of becoming a corona community outreach center, 900 people reported to be infectedதொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் பணியாற்றிய நேரத்தில் முடிதிருத்தும் மையத்திற்கு வந்து சென்றவர்களில் 900 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதன் மூலம் புதிய தொற்று பரவல் மையமாக Joh Bailey சலூன் மாற வாய்ப்பு இருப்பதாகவும் தலைமை சுகாதார துறை அதிகாரி Kerry Chant கூறியுள்ளார். இவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், லேசான அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள பிரபல சலூன் கடையின் உரிமையாளர் Bailey மற்றும் அவரது பங்குதாரர் Marilyn Koch ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டு அதில் இருவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்து இருப்பதாக கூறியுள்ளனர். இதனிடையே இது மிகவும் கடினமான நேரம் என்றும், அத்தனை உயர் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி வந்த தங்கள் சலூன் கடையில் இத்தனை ரகசியமாக தோற்று நுழைந்துவிட்டது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக உரிமையாளர் Bailey கூறியுள்ளார்.

இந்த 900 பேரில் 65 பேர் Bondi கிளஸ்டர் உடன் தொடர்புடையவர்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் தற்போது பரவிவரும் புதிய தொற்று டெல்டா வகை வைரஸ் எனப்படுவது தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது என்றும் தோற்றுப் பரவல் மையங்கள் புதிதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant அச்சம் தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் தேவை இன்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3vWpp0v