Breaking News

இந்தியாவில் மூன்றாம் அலை பரவலுக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக இருக்கலாம் என்றும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் மதுரை, காஞ்சிபுரம், சென்னையில் 9 பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

third wave in India.டெல்டா பிளஸ் வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிப்பதோடு உடலில் ஆண்டிபையோட்டிக் என்னும் எதிர்ப்பு தன்மையை குறைத்துவிடும் என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்த வகை வைரஸ் பாதிப்பு உள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவதோடு அங்கு பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 52 பேருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 20 பேருக்கும் தமிழகத்தில் 9 பேருக்கும் இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்த 32 வயதானவரின் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவருக்கு டெல்டா பிளஸ் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு தொற்று பரவி உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வைரஸ் பகுப்பாய்வு மையத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Link Source: https://bit.ly/3AbGNBU