Breaking News

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Former Myanmar President Aung San Suu Kyi has been sentenced by a Myanmar court to five years in prison on corruption charges.

கடந்த 2021-ம் ஆண்டு மியான்மரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட 11 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Former Myanmar President Aung San Suu Kyi has been sentenced by a Myanmar court to five years in prison on corruption charges..அதன்படி மியான்மர் நாட்டின் மிகப்பெரிய நகரமாக இருப்பது யாங்கூன். அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் தலைவரிடமிருந்து பணம் மற்றும் தங்கக் கட்டிகள் வடிவில் 600000 அமெரிக்க டாலர்கள் வாங்கியதாக ஆங்க் சாங் சூகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தற்போது ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, முறைகேடாக பணம் பெற்றதற்காக ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மீதான வழக்குகளில், அவர் குற்றவாளி என்று நிரூபனம் செய்யப்பட்டால் மொத்தம் 190 ஆண்டுகள் ஆங் சாங் சுகிக்கு தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.