Breaking News

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டு வரும் பண வீக்கத்துக்கு கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் முக்கிய காரணிகளாக இருப்பதாக நிதி அமைச்சர் ஜாஸ் ஃப்ரைடென்பெக் தெரிவித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Finance Minister Josh Frydenberg statement that the corona epidemic and the Ukraine war are key factors in inflation in Australia has sparked controversy.

விரைவில் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்பான தரவுகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா முழுவதும் கடந்தாண்டில் பொருட்கள் மற்றும் சேவைத்துறையில் 5.1 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Finance Minister Josh Frydenberg statement that the corona epidemic and the Ukraine war are key factors in inflation in Australia has sparked controversy..அதன்காரணமாக நாட்டின் பொருளாதார நிலை மக்களிடையே பெரும் கவனமீர்த்துள்ளது. இதுதொடர்பாக மெல்பேர்னில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ஜாஸ் ஃப்ரைடென்பெக், சர்வதேசளவில் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிலிருந்து ஆஸ்திரேலியாவும் தப்பவில்லை. கொரோனா பெருந்தொற்று விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு வழிவகுத்தது. இதனால் பொருட்கள் மற்றும் சேவைத்துறையில் ஐந்து மடங்கு செலவுகள் அதிகரித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் எரிவாயுக்களின் விலையில் ஏற்றம் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள் பலர், ஆஸ்திரேலியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. பணவீக்கம் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது நாட்டின் நலனுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.