Breaking News

குயின்ஸ்லாந்தில் இந்த ஆண்டின் முதல் கொரொனா மரணம் : பிலிப்பைன்சில் இருந்து திரும்பிய 80 வயது முதியவர் மருத்துவமனையில் காலமானார்

First corona death this year in Queensland 80-year-old returns from Philippines dies in hospital

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் 2021ம் ஆண்டில் நிகழும் முதல் கோவிட் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை அம்மாநிலத்தின் தலைமை சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் Jeannette Young தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சில் இருந்து குயின்ஸ்லாந்து திரும்பிய முதியவர் 14 நாள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில், 5வது நாளில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர், பிரின்ஸ் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று தீவிரம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

First corona death this year in Queensland 80-year-old returns from Philippines dies in hospital 1இந்நிலையில், தொற்று மரணங்கள் கொரொனாவின் தீவிரத்தை நமக்கு உணர்த்தி வருவதாகவும், உலகம் முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்பால் உயிரிழந்து வருதே அதற்கு சாட்சி என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்தில் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் உயிரிழந்த 7வது நபர் இவர் என்றும், கடந்த ஏப்ரலில் 83 வயதான கப்பல் பயணி ஒருவர் தொற்று பாதித்து உயிரிழந்ததே கடைசி கொரொனா மரணமாக இருந்ததாகவும் அமைச்சர் Yvette D’Ath கூறியுள்ளார்.

எந்தவொரு அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக தாமதிக்காமல் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம் என்றும், கோவிட் தொடர்பான அச்சம் அல்லது ஆபத்தில் இருக்கிறீர்களா, இல்லையா என்பது முக்கியமல்ல தொற்றுப் பரவல் நம் சமூகத்தை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தலைமை சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர். Jeannette Young கூறியுள்ளார். உங்கள் மன அமைதிக்காகவேனும் விரைந்து முன்வந்து சோதனை செய்துகொள்ளுங்கள் என்றும் டாக்டர் யங் தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் இரவு இரண்டு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டுமே வெளிநாட்டில் இருந்து வந்து ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் ஆவர்.

First corona death this year in Queenslandஉலக நாடுகளில் தொடர்ந்து நாள்தோறும் தொற்று எண்ணிக்கை மிகத்தீவிரமாக உயர்ந்து வருவதால், ஒவ்வொரு உயிரிழப்பும் நமக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவாலை நினைவூட்டுவதாக மத்திய சுகாரதாரத்துறை அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார். தொற்று மிக வேகமாக திரும்பி வருவதற்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் உள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், நாட்டில் மிக குறைந்த கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாங்கள் உலகப் பொருளாதார சந்தைகளுக்கான கதவுகளை விரைவில் திறப்போம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.

மேலும், அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ரத்தம் உறைதல் தொடர்பான இரண்டாவது புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிந்துரைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்க அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு பதிலாக பைசர் மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருதில் எந்தவித தயக்கமும் இல்லை என்று தலைமை சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர். Jeannette Young கூறியுள்ளார்.