Breaking News

யாஸ் வேலியில் சிறிய ரக விமானம் நொறுங்கி விபத்து : பைலட் உட்பட இருவர் நிகழ்விடத்திலேயே பலி

light plane crashes in Yass Valley Two killed, including pilot 1

நியூசவுத் வேல்சின் Sutton என்ற பகுதியில் Tallagandra Lane ல் Cessna 172 என்ற சிறிய ரக விமானம் மாலை 4.30 மணியளவில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதை காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர். யாஸ் வேலியின் ACT பார்டர் பகுதியில் விழுந்ததை அப்பகுதியினர் உறுதி செய்யததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பைலட் மற்றும் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

crashes in Yas ValleyEssential Energy என்ற மின்சார ஒப்பந்ததாரர், வழக்கமாக நடைபெறும் மின்தட கண்காணிப்பு பணிக்காக சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்துள்ளனர். நில மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் நடத்தப்படும் மின்தட ஆய்வுப்பணிகளுக்கு பைலட்டுடன் ஒருவர் சிறிய ரக விமானத்தில் செல்வது வழக்கமாகும். அப்படி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ஆதரவாக தாங்கள் என்றும் துணை நிற்போம் என்று Essential Energy நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. விமான விபத்தால் Tallagandra Lane பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தீயணைப்புத்துறை தன்னார்வலர்களும், யூம் காவல் மாவட்ட அதிகாரிகளும் விரைந்து சரி செய்தனர்.

light plane crashes in Yass Valley Two killed, including pilotவிபத்து தொடர்பான தொடர்பான தகவலை ஆஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு தெரிவித்துள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.