Breaking News

சொகுசு காரை ஓட்டிச் சென்று சாலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தி 2 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த நபர் போதை மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானதை அடுத்து, அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The court has sentenced a man to nine years in prison after he was found guilty of driving a luxury car and causing a fatal road accident, killing two people.

கடந்தாண்டு ஜூன் 23-ம் தேதி டவுன்ஸ்வில்லே பகுதியில் முட்டார்னி என்கிற இடத்தில் டொயோட்டா மாடல் சொகுசு கார் அதிவேகமாக சென்றது. வழியில் டிராஃபிக் நிறுத்தத்தில் பல வாகனங்கள் நின்றிருந்தன. அதிவேகமாக சென்ற அந்த கார், நின்றிருந்த வாகனங்கள் மீது சராமாரியாக மோதியது.

The court has sentenced a man to nine years in prison after he was found guilty of driving a luxury car and causing a fatal road accident, killing two people..இந்த சம்பவத்தில் ஹாலி ஸ்டீவர்ட் மற்றும் டேனியல் மிட்செல் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற 32 வயதான ஏடன் ஜான் மெக்லெனன், விபத்து நடந்த நாளில் உயர் ரக போதை மருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு கூறி நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஏடனை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அதை தொடர்ந்து அவருகு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.