Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை தொற்றுக்கு ஐம்பது வயது பெண் உயிரிழப்பு : ஐந்தாவது உயிரிழப்பு பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறவிப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூகப் பரப்பில் மூலமாக புதிய முறையில் டெல்டா வைரஸ் ஒரே நாளில் 98 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு சிட்னி பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து டெல்டா வகை வைரஸ்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

20 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சமூக பரவல் தொற்று தொடர்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 17 பேர் புதிய வகை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது என்று நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

தொற்று பரவல் தொடர்பை துண்டிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சமூகப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் நாம் வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்றும், அதே நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து வெளியில் வர முடியும் என்றும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு வந்த இரண்டு இரட்டையர் Removalist குழுவைச் சேர்ந்தவரின் தாயான 50 வயது பெண் தான் தற்போது டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர் ஆவார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அறியப்பட்ட தொடர்பில் இருந்து அதிகமான தொற்றுப் பரவல் பதிவாகி வருவதாகவும், வீடுகளிலேயே இருப்போருக்கு வைரஸ் பாதிப்பு பதிவாகி வருவதாகவும் ப்ரீமியர் கூறியுள்ளார்.

Fifty-year-old woman dies of delta infection in New South Wales, Fifth death toll rises.மேலும், Fairfield, Canterbury-Bankstown மற்றும் Liverpool ஆகிய ஊரக பகுதிகளில் வாழும் சுகாதாரத்துறை மற்றும் அவசர சேவைகள் பிரிவு உட்பட அத்தியாவசிய தொழில்துறை பணியாளர்கள் என அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு எவரும் அப்பகுதிகளிலிருந்து வெளியே செல்லமுடியாது. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் இதன் மூலமே நாம் தொடர்பை துண்டிக்க முடியும் என்றும் ப்ரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அது தொடர்பான முடிவு எட்டப்படும் என்றும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார். தாங்கள் விரும்பும் தங்களது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Link Source: https://bit.ly/3hOHHgs